Sunday, February 24

பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதே வழமை - கோட்டா





 
ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாட்டில் பெருபான்மையான மக்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது வழமை என்பதால், 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் இதேவகையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா  அல்லது அதிகாரங்களை குறைக்க வேண்டுமா அல்லது அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைப்பகது மிகவும் சிறந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, இலங்கையில் செயற்படும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் தமது நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் முன்வைத்து,  மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment