Monday, February 18

மார்ச் 15க்கு முன்பே புதிய போப் தேர்வு?

மார்ச் 15க்கு முன்பே புதிய போப் தேர்வு?
தற்போது உள்ள போப் 16ம் பெனடிக்ட் எதிர்வரும் 28ம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 600 ஆண்டுகளாக போப் இறந்த பின்புதான் புதிய போப் தேர்வு நடந்துள்ளது.

தற்போதுதான் முதல் முறையாக ஒருவர் இராஜினாமா செய்த நிலையில் நடக்க உள்ளது. புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல்கள் சபை கூட்டம் மார்ச் 15 முதல் 19ம் திகதிக்குள் ஒரிரு நாளில் துவங்கும் என்று வாடிகன் செய்தி தொடர்பாளர் பெடரிகோ லாம்பார்டி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று கூறுகையில்...

‘புதிய போப்பை தேர்வு செய்யும் 117 கார்டினல்களும் ஏற்கனவே ரோமில் உள்ளதால், மார்ச் 15ம் திகதிக்கு முன்பே கார்டினல்கள் சபை கூட்டம் துவங்கலாம்’ என்றார்.

No comments:

Post a Comment