Friday, February 1

சட்டக்கல்லூரி : சிங்கள மாணவர்களுக்கு 14 புள்ளிகள் வழங்குக: பொதுபலசேனா







கடந்த வருடம் நடைபெற்ற சட்டக் கல்லூரி அனுமதிப்பரீட்சையில்  சிங்கள மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கு 14 புள்ளிகள் வீதம் வழங்க  வேண்டும் எனவும் அப்போதே தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை தீர்க்க முடியுமெனவும்   பொதுபலசேனா  தெரிவித்துள்ளது.
சிங்கள மொழி மூலமான பரீட்சை வினாத்தாளில் 7 வினாக்கள் தவறாக இருந்ததாகவும் அதுவொரு மொழியாக்கப்பிழை எனவும் அதற்கு புள்ளிகள் வழங்கப்படவேண்டும் எனவும் அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த மொழியாக்கப்பிழைக் காரணமாக தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அதிக புள்ளிகளை பெறக்கூடியதாக இருந்துள்ளதுடன் சிங்கள மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குறைந்த புள்ளிகளை எடுப்பதற்கு காரணமானது.
குறித்த பரீட்சையில் முஸ்லிம் மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று முன்னணியில் வருவதற்கு அதுவே பிரதான காரணமாக அமைந்தது. இது சிங்கள மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
இதனால் சிங்கள மாணவர்களுக்கு 14 புள்ளிகள் வழங்கப்படவேண்டும். அப்போதே இந்த பிரச்சினை தீரும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment