அமைச்சரவையில் நேற்றுமுன்தினம் நிகழ்த்தப்பட்ட மாற்றம் காமிடிக்கலாட்டா என, ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஒரே விடையத்திற்காக பல அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நகைச்சுவை
நிகழ்ச்சியாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல்துறை
அமைச்சராக ஒருவரும், பூந்தோட்டங்களை பராமரிப்பதற்காக ஒரு அமைச்சரும்,
இதைவிட நகைச்சுவையோ நகைச்சுவை சீனிக்காக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டமை.
போகிற போக்கை பார்த்தால் வெண்டிக்காய், கிழங்கு, தேயிலைத்தூள், பால்மா,
கோவா என்ற அடிப்படையில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அமைச்சர் என தனித்தனியாக
அமைச்சர்கள் நியமிக்கப்படும் காலம் தொலைவில் இல்லை.
சர்வதேசத்தில் எந்த நாட்டில் பார்த்தாலும் அந்தந்த நாட்டு அமைச்சர்கள்
மதிப்பிட்குரியவர்களாக கருதப்படுகிறார்கள். எனினும் இலங்கை அமைச்சர்களுக்கு
மதிப்பு இல்லாத துர்ப்பாக்கிய நிலை இன்று உருவாகியுள்ளது என, திஸ்ஸ
அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment