Thursday, June 21

பிரான்சில் மிகப்பெரும் பள்ளிவாசலை கட்ட நீதிமன்றம் அனுமதியளித்தது

பிரான்சின் 2,50,000 முஸ்லிம்கள் வசிக்கும் மார்செய்ல்ஸ் நகரில் மிகப்பெரிய மசூதி ஒன்றை கட்ட நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரான்ஸின் இரண்டாவது பெரிய சமயமாக இஸ்லாம் உருவெடுத்துள்ளது. இவர்கள் தொழுகை நடந்த இடமற்றவர்களாக இருந்த நிலை இனி மாறும்.

இந்த மசூதி 22 மில்லியன் யூரோ செலவில் கட்டப்படும். 82 அடி உயர கோபு மினார்களைக் கொண்டிருக்கும். ஒரே சமயத்தில் 7000 பேர் கூடித் தொழுகை நடத்தலாம்.
கடந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி பெற்ற இந்த மசூதி பல இடையூறுகளை இடையில் சந்தித்தது. மசூதியை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் வழக்குத் தொடர்ந்ததால், மார்செய்ல்ஸின் நகர் நிர்வாகக்குழு அனுமதி மறுத்தது.
தற்போது ஆட்சி மாறியதும் இந்த வழக்கு தள்ளுபடியானது. மசூதி கட்டுவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியது. ஐரோப்பாவில் அதிகபட்ச முஸ்லிம்கள்(ஐந்து அல்லது ஆறு மில்லியன்) பிரான்சில் வாழ்வதால் இங்கு பெரிய மசூதி எழுப்பப்படுவது முஸ்லிம்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

No comments:

Post a Comment