அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய இஸ்லாமிய அரசியல் நூல் தமிழில்
மொழிமாற்றப்பட்டு வெளியிடப்படவுள்ளது. இஸ்லாமிய அரசியல் என்னும் தலைப்பில்
தமிழுக்கு மொழிமாற்றப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீடு எதிர்வரும் வியாழகிழமை
இல. 77, தெமடகொட வீதி, கொழும்பு 09இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர்
கூடத்தில் மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேற்படி இஸ்லாமிய அரசியல் நூல் வெளியீடு
-நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி - Front for justice and peace (
FJP) என்ற அமைப்பு மேற்கொண்டுள்ளது . இந்த வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை
தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம் .எல் .ஏ.
காதர் அவர்களினால் நிகழ்த்தப் படவுள்ளதுடன் , நூல் அறிமுக உரையை இஸ்லாஹியா
அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம் .எச் .எம் .உவைஸ்
(இஸ்லாஹி) நிகழ்த்தவுள்ளார் .
பெண்களுக்கான தனியான இடவசதி
செய்யப்பட்டுள்ளதுடன், நிகழ்வுகள் மஹ்ரிப் தொழுகையுடன் ஆரம்பமாகும் என்று
நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி தெரிவித்துள்ளது .
No comments:
Post a Comment