மொஹம்மத் அம்ஹர்: மாத்தறை மாவட்டத்தின் இரு மஸ்ஜிதுகளுக்கு சென்ற புலனாய்வு பிரிவினர் , நீண்டநேரமாக, வெள்ளிகிழமை கொத்துபா உரை தொடர்பில் மஸ்ஜித் இமாம்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் தன்னிடமும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு விரோதமான போக்கு அதிகரித்து வருகிறது , இந்த நிலையில் வெள்ளிகிழமை நிகழ்த்தும் கொத்துபா உரைகளை தொடர்பாகவும் பள்ளியின் இமாம்கள் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர். மாத்தறையில் இரண்டு மஸ்ஜிதுகளுக்கு சென்ற புலனாய்வாளர்கள் என்று தெரிவித்தவர்கள் பள்ளியின் மௌலவிகளிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் , இந்த நிலை தொடர்ந்தால் வெள்ளிகிழமைகளில் மிம்பரில் உரையாற்றப் படும் கொத்துபாக்களுக்கு அனுமதி பெறவேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார் .
அதேவேளை அண்மையில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தம்புள்ள மஸ்ஜித் தொடர்பாக நாட்டு பூராவுமுள்ள முஸ்லிம்களை நோன்பு பிடிக்குமாறும் ,முற்றவெளி பிராத்தனையில் ஈடுபடுமாறும் அறிவித்தது அதை தோர்ந்து குறித்த அறிவிப்பு நாட்டிலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளினுடாகவும் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப் பட்டது . அந்த அறிவிப்பு தொடர்பாகவும் மாத்தறை பள்ளிகளில் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது .
No comments:
Post a Comment