Saturday, June 16

பௌத்தபாட விவகாரம்: 14வயது மாணவனை வதைத்த பௌத்த பிக்கு! ஆசிய மனித உரிமைகள் ஆணையம்

 
பௌத்த சரித்திர பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, பதில் அளிக்க மறுத்த 14வயது கத்தோலிக்க பள்ளி மாணவனை, பௌத்த பிக்கு ஒருவர் வதைத்த சம்பவத்தினை, ஆசிய மனித உரிமைகள் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் நிலையில் இவ்விவகாரத்தினை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில்,
கண்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும்அமில தரங்க திலகரத்னே என்னும் பெயரினைக் கொண்ட 14 வயது கத்தோலிக்க மாணவனே, இவ்வாறு பௌத்த பிக்குவின் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பௌத்த சரித்திரம் தொடர்பிலான பாடத்தில், ராகுல தேரோவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் கத்தோலிக்க மதத்தினை தழுவியிருப்பதால் குறித்த கேள்விக்கு தன்னால் பதில் அளிக்க முடியாதென மாணவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பௌத்த சரித்திர ஆசிரியரான தேரோ, அந்த மாணவன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்.
மத அடிப்படையிலேயே குறித்த மாணவன் மீது வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்தோடு, பிற மதங்களுக்கு உரிய அனுசரணை காட்டப்படாமல் மாணவன் வஞ்சிக்கப் பட்டுள்ள்தாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளது.
தற்போது கண்டி போதனா வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டிருப்பபோடு, இலங்கை காவல்துறையினிரிடம் மாணவனின் குடும்பத்தினர் முறைப்பாடு செய்த போதும், இதுவரை காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இட்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment