கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் பதவியை தமது கட்சிக்கு வழங்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் சரியான இணக்கப்பாடு ஏற்படுத்த முடியாவிட்டால் தனித்து போட்டியிட நேரிடும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
கடந்த தடவை தமிழ் பிரதிநிதி ஒருவர் முதலமைச்சர் பதவியை வகித்து வந்ததாகவும், இம்முறை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment