மத ரீதியாக விருத்தசேதனம்(கத்னா) செய்வதை ஜேர்மனிய நீதிமன்றம் இன்று முதல் தடை செய்துள்ளது .இதையடுத்து அங்கு விருத்த சேதனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்
இந்த தடையை முஸ்லீம் , யூத குழுக்கள் கடுமையாக கண்டித்துள்ளன
ஜெர்மனியின் கொலோன் நகரில் உள்ள நீதி பாதுகாப்பு அதிகாரசபை நீதிமன்றம் ,மத ரீதியான விருத்த சேதனத்தை இன்று தடை செய்துள்ளதுடன் அது உடலுக்கு சேதம் விளைவிப்பதாகவும் தெரிவித்துள்ளது
ஜேர்மனிய சட்டப்படி மத சுதந்திரத்தை இது பாதிக்காது என்று தெரிவித்துள்ள அந்த நீதிமன்றம், சிறுவர்களை காயப்படுத்துவதால இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது
முஸ்லீம் வைத்தியர் ஒருவர் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு அண்மையில் விருத்தத் சேதனம் செய்ததையும் ,ஒரு சில தினங்களில் இரத்த பெருக்கு காரணமாக அந்த சிறுவன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டமையையும் அந்த நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது
அண்மையில் நடைபெற்ற அந்த சம்பவத்தை அடுத்து ஜேர்மனிய அதிகாரிகள் அந்த மருத்துவருக்கு எதிராக குற்ற விசாரணைகளை ஆரம்பித்தனர்
இந்த முட்டாள்தனமான ஜெர்மனிய நீதிமன்ற தீர்ப்பானது விஞ்ஞான ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ,அல்லது உடலுக்கு மிகவும் சுகாதாரமானது என கூறப்பட்டுள்ள விருத்த சேதனம் பற்றி ஆராயாமல் எடுக்கப்பட்ட தீர்ப்பு என்று கூறப்படுகின்றது .
இந்த தீர்ப்பானது ஜெர்மனியில் மருத்துவ செயல்முறைகளில் மாற்றம் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது
இதேவேளை இந்த தீர்ப்பானது ஜெர்மனியில் உள்ள முஸ்லீம் ,யூத மத அமைப்புகளை ஆத்திரப்படுத்தியுள்ளது
இந்த தீர்ப்பு ஜெர்மனியில் மத சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் செயல் என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளன
விருத்த சேதனம் செய்வது எயிட்ஸ் போன்ற நோய்கள் வரும் சத்தியத்தை குறைப்பதாகவும் ,உடலுக்கு சுகாதாரமானது என்றும் , சிறு நீர் சம்பந்தமான் நோய்கள் வருவதை தடுக்கும் என்றும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் முட்டாள் தனமான இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது
இதேவேளை நோர்வே அரசும் விருத்த சேதனத்தை தடை செய்வதற்குரிய நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment