Monday, June 25

பிள்ளையானின் கட்சி இரண்டாக பிளவு?

 
 
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்படும் பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இரண்டாக பிளவடையக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
கட்சிக்குள் உட்பூசல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களின் போது கட்சியின் சில உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.

மூன்று மாகாணசபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணையத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
பிள்ளையானின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாத காரணத்தினால் இவ்வாறு வேறும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல் தொடர்பில் பிள்ளையானை தொடர்பு கொள்ள மேற்கொள்ள முயற்சி தோல்வியடைந்ததாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment