Sunday, June 24

கலாநிதி முஹமத் முர்ஸி ஜனதிபதியாக வெற்றிபெற்றுள்ளார்



இணைப்பு-2 கலாநிதி முஹமத் முர்ஸி வெற்றிபெற்றுள்ளார் என்று எகிப்து தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது . எகிப்திய ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வ முடிவு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சித் தலைவர் கலாநிதி முஹமத் முர்ஸி வெற்றிபெற்றுள்ளார்.
சற்று முன்னர் எகிப்திய தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ முடிவின்படி இந்த தேர்தலில் போட்டியிட்ட முஹமத் முர்ஸி 13.2 மில்லியன் வாக்குகளை பெற்று 51.73 வீத வாக்குகள் மூலம் எகிப்தின் ஜனாதிபதியாக வெற்றி (48.27 வீதம்) பெற்றுள்ளார் . இவருடன் போட்டியிட்ட அஹமட் சபீக் 12.3 மில்லியன் வாக்குகளை பெற்றமையால் தோல்வியை சந்தித்துள்ளார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது .

இணைப்பு -2
இந்த வெற்றி அறிவிப்பு கடந்த 21 ஆம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப் பட்டாலும் உத்தியோக பூர்வ முடிவு இன்று வரை தாமதம் ஏற்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் உயர் பீடதிக்கும் நாட்டின் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் இராணுவ உயர் பீடதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் இந்த முடிவு வெளியாகியுள்ளது என்று சர்வதேசசெய்திகள் தெரிவித்துள்ளது .
தற்போது முஹமத் முர்ஸி ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இராணுவம் மேலதிக அதிகாரத்துடன் நாட்டின் சிவில் நிர்வாகத்தில் தலையீடுகளை கொண்டுள்ள முக்கிய சக்தியாக மாறியுள்ளது , இந்த நிலையில் , பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமை , இராணுவ நிர்வாகம் தமக்கு நாட்டின் சிவில் நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்தும் மேலதிக அதிகாரங்களை பிரகடனப் படுத்தியுள்ளமை என்பன சர்ச்சைகுரிய விடயமாக மாறியுள்ளது .
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையையும் , இராணுவம் தனக்கு மேலதிக அதிகாரங்களை பிரகடனப்படுத்தியுள்ளமையையும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு ஏற்றுகொள்ளாது என்று அது அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment