'பௌத்த பண்பாட்டில் சமத்துவம், சீர்மை, பொது நலம் போன்றவைகள் பற்றி குறிப்பிடப்படுகின்றன எனவும் இந்த விழுமியங்களைப் படிப்பினையாகக் கொண்டே பௌத்த அரசர்கள் அரசாங்கத்தை நடாத்திச் சென்றனர் சென்றனர் எனக்குறிப்பிடும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச தற்போது முற்று முழுதாக இவற்றுக்கு விரோதமான அரசியல் முறைதான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
ஆவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது, 'இப்போது பாருங்கள், சனநாயகம் என்று எதுவும் கிடையாது. வெள்ளையர்கள் தங்களிடம் இல்லாத ஒன்றைத்தான் எங்களுக்குத் தந்தார்கள். அது தான் சனநாயகம் என்பது. இவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, மீண்டும் கிராம சபை முறைக்குச் செல்ல வேண்டும் என்று நான் சொல்கின்றேன். அங்கு தான் உண்மையான சனநாயகம், சமத்துவம் போன்ற எல்லாம் இருக்கின்றன.
கற்றறிந் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையால் அதைச் செய்ய முடியாது. பௌத்த சமயத்தில் உள்ள சமத்துவத்தைக் கட்டியெழுப்ப முடியாது. பௌத்த சித்தாந்தத்தில் காணப்படுவனவற்றை சரியாகச் செயல்படுத்துவதானால் நமக்கு நமது உரிமை இருக்க வேண்டும். அவ்வாறு இன்றி, ஒவ்வொன்றுக்கும் ஆணையங்களை நியமித்து ஆய்வுகளைச் செய்துகொண்டிப்பதில் பயன் எதுவும் இல்லை.
No comments:
Post a Comment