Thursday, May 10

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்: மேர்வின் சில்வாவின் மகன் மாலக


தற்போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் தான் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் இருப்பினும் பொதுமக்களிடமிருந்து வேண்டுகோள் ஏதும் விடுக்கப்படுமானால் அதனைத் தான் கவனத்திற்கொள்வேன் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா தெரிவித்துள்ளார்.

'சமூக சேவைகளிலும் வர்த்தக நடவடிக்கைகளிலும்; தீவிரமாக ஈடுபட்டுள்ள நான் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை' என அவர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.


பொதுமக்களிடமிருந்து வேண்டுகோள் ஏதும் விடுக்கப்படுமானால்; அதனைத் தான் கவனத்திற்கொண்டு தனது தந்தையினதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் முழு ஆசீர்வாதங்களுடன்; அரசியலில் ஈடுபடுவேன் எனவும் மாலக சில்வா குறிப்பிட்டுள்ளார்.

'மக்களின் நலன் கருதி சமூக சேவைகளிலும் தொண்டுப்பணிகளிலும் நான் ஈடுபட்டுவருகின்றேன். இருப்பினும் மக்கள் சக்தியை நான் உறுதியாக நம்புகின்றேன்' என அவர் கூறினார்.

No comments:

Post a Comment