ஜேர்மனியில் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக வேண்டி தீவிர வலதுசாரி சிந்தனையுடன் கூடிய Pro NRW என்ற கட்சி உதயமாகியுள்ளது. அதன் முதல் பிரச்சாரத்திலேயே முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தையும், வெறுப்பையும் தோன்றும் வகையிலேயே ஆரம்பித்துள்ளது.
2005 ஆம் ஆண்டில் டென்மார்க்கை சேர்ந்த ஓவியர் குந்த் வெஸ்டர்கார்டு என்பவர், முகம்மத் நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரமாக வரைந்ததற்காக, தற்போது இக்கட்சி அவரது பெயரால் ஓர் பரிசை அறிவித்துள்ளது. சிறந்த முஸ்லிம் கேலிச்சித்திரத்திற்கு இப்பரிசு வழங்கப்படும் என்று Pro NRW கட்சி அறிவித்துள்ளது.
இதற்கும், தனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும், தன்பெயரை அநாவசியமாகப் பயன்படுத்துவதால் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் வெஸ்டர்கார்டு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment