தம்புள்ளயில் அமைந்துள்ள பள்ளிவாசலை அகற்றக்கோரி காலியில் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு செவிசாய்க்காது போனால் நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப் போவதாக கடும்போக்கு பௌத்த சிங்கள அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
பௌத்த பாதுகாப்பு மன்றமும், தேசப்பற்று மிக்க பௌத்த சக்தி என்ற அமைப்புகளே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
இந்தப் போராட்டத்துக்கும் செவிசாய்க்காது போனால் நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அந்த இரண்டு அமைப்புக்களும் அறிவித்திருகிகன்றன.
தம்பள்ள முஸ்லிம் பள்ளிவாசல் விவகாரத்துக்க தீர்வு காணும் விடயம் தாமதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இரண்டு பௌத்த அமைப்புகள் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை களுத்துறையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக யாழ் முஸ்லிம் இணையம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
எதிர்வரும் திங்கட்கிழமை களுத்துறையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
பௌத்த பாதுகாப்பு மன்றமும், தேசப்பற்று மிக்க பௌத்த சக்தி என்ற அமைப்புமே இதற்கான அழைப்பை விடுத்திருக்கின்றன. திங்கட்கிழமை காலை 9 மணியளவில் களுத்துறையிலுள்ள சோம தேரரின் சிலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுளளது இதில் பங்கேற்று தம்புள்ள பள்ளிவாசலை அந்த இடத்திலிருந்து உடனடியாக அகற்ற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்துமாறு பௌத்த சிங்கள மக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment