Tuesday, January 31

இலங்கையில் 4 முஸ்லிம் ஆயுத அமைப்புக்கள்

(தமிழ் ஊடகமொன்றில் வந்துள்ள இச்செய்தியை நாம் இங்கு பதிட காரணம், இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கெதிராக மேற்கொள்ளப்படும் சதிவேளைகள் குறித்து நம்மவர்கள் விழப்பு பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான்)

இலங்கையில் செயல்பட்டு வருகின்ற முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் குறித்து அமெரிக்கா சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் மிகவும் அதிர்ச்சி ஊட்டுபவையாகவும், அதே நேரம் சுவாரஷியமானவை ஆகவும் உள்ளன.
புலனாய்வுப் பிரிவில் அதிகாரி தரத்தில் உயர் பதவி வகித்தவரான முஸ்லிம் ஒருவரே தூதரகத்துக்கு இத்தகவல்களை 2004  ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் திகதி வழங்கி இருக்கின்றார்.
 இத்தகவல்களில் மிக முக்கியமானவை வருமாறு:



-*கொழும்பை தளமாக கொண்டு முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் நான்கு செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா ஜம்தி இஸ்லாம், தௌஹித் ஜமாத், தப்லீக் ஜமாத், ஜமாதி முஸ்லிம் ஆகியனவே நான்கும். கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்களை தளமாக கொண்டு செயல்படுகின்றது ஸ்ரீலங்கா ஜம்தி இஸ்லாம். உலக முஸ்லிம் இளைஞர்கள் பேரவை என்கிற அமைப்பு இந்த இயக்கத்துக்கு நிதி வழங்குகின்றது. அத்துடன் பாகிஸ்தான், சவூதி அரேபியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள பாடசாலைகளில் முஸ்லிம் இளைஞர்கள் கல்வி கற்கின்றமைக்கு இப்பேரவை நிதி அனுசரணை வழங்குகின்றது.
இந்த இளைஞர்கள் கல்வியை நிறைவு செய்து நடு திரும்பிய பின்னர்  கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெரும்பாலும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

தப்லீக் ஜமாத் இயக்கத்துக்கு இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கிளைகள் உள்ளன. இலங்கை வருகின்ற வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களுக்கு இவ்வியக்கத்தோடு தொடர்புகள் உள்ளன
ஜமாதி முஸ்லிம் இயக்கம் மிகச் சிறிய குழு. முறையான அளவில் வளர்ச்சி காணவில்லை.

*கிழக்கு இலங்கையில் உள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்களை பாகிஸ்தானிய அமைப்பாளர்கள் வந்து சந்தித்து இருக்கின்றார்கள். ஜிஹாத், ஒசாமா, சதாம் .. என்று  பெயரிடப்பட்ட முகாம்களில் இக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு தற்காப்புப் பயிற்சிகள் கற்பிக்கப்பட்டு உள்ளன.
ஆனால் சுடுகலன்களை இயக்குகின்ற பயிற்சிகள் வழங்கப்பட்டனவா? என்பது தெரியவில்லை. புனிதப் போராட்டங்களில் ஈடுபட முஸ்லிம் இளைஞர்களில் ஒரு தொகையினர் வெளிநாடு சென்றும் இருக்கின்றனர். ஏனையோர் வேலை செய்கின்றமைக்கு அல்லது கல்வி கற்கின்றமைக்கு சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுகின்றனர். சவூதியை தளமாக கொண்டு இலங்கையில் இயங்குகின்ற உலக முஸ்லிம்கள் இளைஞர்கள் பேரவை என்கிற அரச சார்பற்ற அமைப்பு நிதி உதவிகளை வழங்கி இந்நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் சூடானிய பிரஜை ஒருவர் இப்பேரவையை நிர்வகிக்கின்றார்.
* இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழுக்களின் தோற்றத்துக்கு பிரதான காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வந்த தாக்குதல்கள். நாடாளுமன்ற தேர்தலில் அண்மையில் ஆறு ஆசனஙகளை வென்றிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு . எஃப். யு (Islamic Unity Foundation) என்கிற அமைப்பின் பேராதரவு உள்ளது. இவ்வமைப்பில் இராணுவ, புலனாய்வு, சமய மற்றும் அரசியல் பிரிவுகள் இருக்கின்றன.

இவ்வமைப்பின் அரசியல் பிரிவு தலைவர்தான் அமீர் அலி. இவர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி உள்ளார். இவ்வமைப்பிடம் ஆயுதங்கள் உள்ளன. ஏராளமான வட்டாரங்களில் இருந்து ஆயுதங்களைப் பெறுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா அண்மையில் மட்டக்களப்பில் இருந்து பின்வாங்கியபோது அவரிடம் இருந்து ஒரு தொகை ஆயுதங்களை வாங்கி இருக்கின்றனர் அல்லது கைப்பற்றி இருக்கின்றனர்.
இந்தியாவில் இருந்தும் ஆயுதங்கள் இவர்களுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வமைப்பைச் சேர்ந்த இலங்கை உறுப்பினர்கள் இந்தியாவின் காஷ்மீரில் இராணுவ பயிற்சிகள் பெற்று இருக்கின்றார்கள். காஷ்மீரில் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கவும் கூடும். இந்தியாவின் பாதாள உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் இவ்வமைப்பினருக்கு தொடர்புகள் இருக்கக் கூடும். ஆனால் இலங்கையில் உள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பதில் நம்பிக்கை இல்லை.
*புலிகளிடம் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்க திருகோணமலையில் பிரதான மூன்று முஸ்லிம் இராணுவ குழுக்கள் இயங்குகின்றன. நொக்ஸ், ஒசாமா குழு, ஜெட்டி குழு என்பனவே மூன்றும். இவற்றுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு உள்ளது. அம்பாறையில் முஜாஹதீன் ஆயுத குழு உள்ளது. இதில் ஆயுதம் தரித்த போராளிகள் 150 பேர் வரை உள்ளார்கள். திருகோணமலையில் இயங்கி வருகின்ற ஒசாமா குழுவை விட இது பலம் வாய்ந்தது.

*இலங்கையின் பாதாள உலக கோஷ்டிகளுக்கும் முஸ்லிம் தீவிரவாத குழுக்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் நிலவுகின்றன. போதைப்பொருள், ஆயுத மற்றும் மனிதக் கடத்தல்களுடன் இத்தொடர்புகள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. கொழும்பின் மிகப் பயங்கரமான பாதாள கோஷ்டி மாளிகாவத்தை பகுதியில் உள்ளது. இப்பாதாள கோஷ்டி கருணாவால் கைவிடப்பட்ட ஆயுதங்களை பெற்று கிழக்கு முஸ்லிம் குழுக்களுக்கு விற்று உள்ளது என நம்பப்படுகின்றது. இந்த ஆயுதங்களில் தன்னியக்க துப்பாக்கிகள், கிளேமோர் குண்டுகள், மோட்டார்கள் ஆகியனவும் அடக்கம்.
*கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சுக்கான கட்டிடம் தூதரகத்துக்கு மிக அணித்தாக புதிதாக வாடகைக்கு பெறப்பட்டு உள்ளது. அமைச்சர் அதாவுல்லா. புதிதாக நியமனம் பெற்று இருப்பவர். கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு உதவுவதே அமைச்சின் பிரதான நோக்கங்களில் ஒன்று.

அதாவுல்லாவிடம் இருந்து அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகள் இது வரை வெளிப்படவில்லை. ஆனால் இவருக்கு பண்டா குழு என்கிற பாதாள உலக கோஷ்டியுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இக்கிரிமினல் குழுவில் 50 – 60 பேர் வரை உள்ளார்கள். இவர்கள் கிழக்கு மாகாணத்துக்கு பணம், பாதுகாப்பு கொடுக்கின்றார்கள். இக்குழுவினர்தான் அதாவுல்லாவுக்கு பாதுகாப்பு சேவைகள் வழங்குகின்றனர். இக்குழுவினர்தான் ஒசாமா தீவிரவாத குழுவுக்கு பயிற்சிகள், போரியல் உபாயங்கள் சொல்லிக் கொடுத்து இருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment