Tuesday, November 15

துமிந்த சில்வாவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு


Duminda

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை சம்பவம் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைதுசெய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிபதி பிரசன்ன அல்விஸ் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

துமிந்த சில்வா சிகிச்சைக்கென சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவர் நீதிமன்ற அனுமதி பெறாமலேயே நாட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார் என பாரதவின் மகள் ஹிருணிகா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையிலேயே தற்போதைய நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment