Tuesday, November 15

அமெரிக்க இராணுவத்திலுள்ள முஸ்லிம்களை நம்பாதீர்கள்



அமெரிக்க இராணுவத்திலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட வேண்டும் என குடியரசுக் கட்சிப் பிரதிநிதியான ரிக் வோமிக் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களால் டென்னஸி மாநில முஸ்லிம்கள் விசனமடைந்துள்ளனர்.

‘‘இராணுவத்திலுள்ள முஸ்லிம்களிடமும் அமெரிக்க முஸ்லிம் மக்களிடமும் அவர் உடனடியாக மன்னிப்புக் கோரவேண்டும். இது முஸ்லிம்களை வெறுப்படையச் செய்து, அவர்களை தனிமைப்படுத்தவே வழிவகுக்கும் என்று டென்னஸி இஸ்லாமிய நிலையத்தின் போதகரான அப்துர் றஹ்மான் ஸாவோ கூறியுள்ளார்.
‘அமெரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதம்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும்போது ரிக் வோமிக் இக்கருத்தை முன்வைத்துள்ளார்.
‘‘எமது இராணுவத்தில் இருக்கும் ஒரு முஸ்லிமையும் தனிப்பட்ட முறையில் நான் நம்புவதில்லை. ஏனெனில், அவர்கள் எம்மிடம் பொய் சொல்லுமாறு வேண்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் குர்ஆனைப் பின்பற்றும் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் அவர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். ஏனெனில் அவர்கள் என்னைக் கொல்லுமாறு வேண்டப்பட்டுள்ளார்கள்.இவை அவர் முன்வைத்த நச்சுக் கருத்துக்கள்.
ரிக் வோமிக் அவரது இஸ்லாமிய விரோதப் போக்கிற்காக நன்கறியப்பட்டவர். ‘‘நாங்கள் யாருடன் போராடுகிறோம்? முஸ்லிம்களான அல்-காயிதாவுடனும் தாலிபான்களுடனும்தான் நாம் போராடுகிறோம்எனவும் அவர் கூறியுள்ளார்.
இது அமெரிக்க முஸ்லிம்களை கோபமூட்டியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அரசாங்க அதிகாரிகளை வேண்டியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களது தொகை பற்றிய சரியான கணக்கெடுப்புகள் இல்லை. எனினும் இது அண்ணளவாக 7 – 8 மில்லியன்களாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment