Monday, October 17

இஸ்ரேல்-ஐரோப்பா எரிவாயு குழாய் திட்டத்திற்கு துருக்கி அனுமதி மறுப்பு



October 17, 2011

இஸ்ரேலிருந்து துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு இயற்கை வாயுவை கொண்டு செல்லும் எரிவாயு குழாய் திட்டத்திற்கு துருக்கி அரசு அனுமதி மறுத்துள்ளது.
துருக்கியில் தனியார் நிறுவனங்கள் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி சமர்ப்பித்த மனுவை துருக்கி எரிசக்தி துறை அமைச்சர் தானிர் இல்திஸ் தள்ளுபடிச் செய்ததாக அறிவித்தார்.
காஸ்ஸா நிவாரணக் குழுவினரின் கப்பல் மீது தாக்குதல் நடத்தி9 துருக்கியர்களை கொலைச் செய்யவில்லையெனில் இத்திட்டத்திற்கு தடை ஏற்பட்டிருக்காது என இல்திஸ் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலின் அராஜக தடையினால் துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற உதவிக் கப்பலை கடந்த 2010 மே மாதம் இஸ்ரேல் தாக்கி 9 துருக்கிய தன்னார்வத் தொண்டர்களை அநியாயமாக படுகொலைச் செய்தது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கு மன்னிப்புக்கோர வேண்டும் என்ற துருக்கியின் கோரிக்கையை இஸ்ரேல் அலட்சியப்படுத்தி வருவது இரு நாடுகளிடையேயான உறவை சீர்குலைத்துள்ளது.

No comments:

Post a Comment