கொழும்பு தேர்தல் முடிவு பற்றி நீங்கள என்ன கூறுகிறீர்கள் என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்டபோது பதிலளித்த ஜனாதிபதி நீங்கள் எதனை கூறுகிறீர்களோ அதனையே நானும் கூறுகிறேன். கொழும்பின் முடிவு இப்படி அமையும் என்பது எனக்கு முன்பே தெரியும். முஸ்லிம்கள் எங்களுக்கு புரியாணி தருவார்கள் வாக்கு தரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது குறுக்கிட்ட முஸ்லிம் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கொழும்பு தவிர்ந்த பகுதிகளில் முஸ்லிம்கள் கணிசமாக ஆளும் கட்சிக்கு வாக்குகளை வழங்கியுள்ளார்கள். காலி நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் ஆளும் கட்சில் முஸ்லிம் வேட்பாளர்கள் பட்டியலின் ஆரம்பதிற்கே தெரிவாகியுள்ளார்கள் என்று தெரிவித்தபோது. அங்கெல்லாம் நிலைமை வேறு என்று குறிபிட்ட ஜனாதிபதி அம்பாந்தோட்டையில் ஆறு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினோம் பலர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை . பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நடை பெற்று முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 28 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அம்பாந்தோட்டையில் மாநகர சபைக்கான தேர்தலில் ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் மூன்று பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவாகியுள்ளனர். என்பது குறிபிடத்தக்கது.
நடை பெற்று முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மொத்தமாக 420 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் 70 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து 16 உறுபினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து ) 28 முஸ்லிம் உறுபினர்களும் , ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 25 முஸ்லிம் உறுபினர்களும் , ஐக்கிய ஜனநாயக முன்னணியி 01 முஸ்லிம் உறுபினருமாக 70 பேரே தெரிவாகியுள்ளனர்.
இதில் கூடிய முஸ்லிம் உறுப்பினர்களை பெற்றுகொண்டுள்ள கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே உள்ளது என்பது குறிபிடதக்கது .