Sunday, July 3

நோன்பு விடுமுறையை இரத்துச் செய்ய எடுக்கப்படவிருந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது


July 02, 2011

கொழும்பிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு வாகனங்களில் போகும் மாணவர்களுக்கு நோன்பு ஒரு பிரச்சினையாக இல்லாத போதும் கிராமப்புறங்களில் பல மைல் தூரம் சென்று படிக்கும் மாணவர்களுக்கு நோன்பு பிடிப்பது கஷ்டமான காரியமாகும்.

நோன்பு விடுமுறையை இரத்துச் செய்யும் தீர்மானத்தை பல்வேறு மட்டத்தினராலும் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு வந்ததையடுத்து அரசு கைவிட்டு விட்டதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். கடந்த புதன் கிழமை கல்வியமைச்சில் நோன்பு விடுமுறையை இரத்துச் செய்யும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது கல்விமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்றுள்ள இக்கலந்துரையாடலில் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்...
 
முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டியதையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது விரிவாக
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் ஒரே காலத்தில் நடத்துவதற்கு ஏதுவாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு வருடாந்தம் வழங்கப்படும் நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்யும் தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவிருந்தது.
முன்னாள் கொழும்பு மாநகர பிரதி முதல்வர் அசாத் சாலியூடாக இத்திட்டத்தை அரசு முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுகின்றது முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு நோன்புகால விடுமுறையை இரத்துச் செய்ய வேண்டும் என்று அவர் யோசனையை முன்வைத்துள்ளார் இக்கருத்தை அடிப்படையாக வைத்து கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிவதற்கான அவசரக்கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.
இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், ஹுனைஸ் பாரூக் ஆகியோருடன் கல்வியமைச்சில் பணிபுரியும் முஸ்லிம் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். சமூகத்தின் கருத்தையும் நிலைப்பாட்டையும் பெற்றுக் கொள்ளாமல் நோன்புகால விடுமுறையை இரத்துச் செய்ய எடுக்கும் முயற்சியை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர் என்று தெரியவருகின்றது .
முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு கால விடுமுறை நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் 1942 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது. எமது முன்னோர்களினால் அன்று பெற்றுக் கொள்ளப்பட்ட உரிமை இந்த உரிமையைப் பறிப்பதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன் இந்த முயற்சிக்கு எம்மவரே துணை போவது விசனத்தைத் தருகிறது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், கொழும்பிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு வாகனங்களில் போகும் மாணவர்களுக்கு நோன்பு ஒரு பிரச்சினையாக இல்லாத போதும் கிராமப்புறங்களில் பல மைல் தூரம் சென்று படிக்கும் மாணவர்களுக்கு நோன்பு பிடிப்பது கஷ்டமான காரியமாகும்.
இதனைக் கருத்திற்கொள்ளாமல் கொழும்பில் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களிலிருந்து முடிவெடுப்பதைக் கண்டிப்பதாகவும் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் போன்றோர் இதற்கு துணை போயிருப்பதை முஸ்லிம் சமுகம் கடுமையாக எதிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் கிடைக்க பெற்ற தகவகள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment