Sunday, July 3

காலிமுகத்திடல் கடல் நில ஹோட்டல் திட்டம் கைவிடப்பட்டது


[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 01:52.16 AM GMT ]
கொழும்பு காலிமுகத்திடல் கடல்நிலத்தில் அமைக்கப்படவிருந்த சீன நாட்டின் ஆடம்பர ஹோட்டல் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் 700 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவிருந்தது
 
 
அரசாங்க உயர்மட்ட உத்தரவின் பேரில் அமைச்சரவை இது தொடர்பில் மீளாய்வு செய்யும் வகையில் இந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையி;ல் அமைச்சரவையின் மீளாய்வுக்குழுவே இதனை முன்கொண்டு செல்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும். எனினும் இந்த திட்டம் கைவிடப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை

கடந்த மேதினத்தன்று காலிமுகத்திடல் பிரதேசத்தில் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதனை கருத்திற்கொண்டே குறித்த சீன ஹோட்டல் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது

எனினும் ஏற்கனவே கொழும்பு காலிமுகத்திடலுக்கு முன்னால் அமைந்துள்ள இராணுவ தலைமைக காணியில் சீன முதலீட்டுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்று அமையவுள்ள நிலையில் கடல் நில ஹோட்டலையும் அமைப்பது சீன நிறுவனங்களுக்கு வர்த்தக நோக்கில் நட்டத்தை ஏற்படுத்தும்.

எனவே சீன நிறுவனங்களின் கோரிக்கையின் பேரிலேயே காலிமுகத்திடல் கடல்நில ஹோட்டல் திடடம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment