Tuesday, July 19

தமிழ்நாட்டில் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் மாறுவேடம் போட்டார்களா..?


 
 அனைத்துலக இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்  காயல்பட்டினம் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் மற்றும் ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டுக்கு இரகசியமாகச் சென்று வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 
 இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளில் இருந்தும் 1000 வரையிலான தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கையிலிருந்தும் சுமார் 150 எழுத்தாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இவர்களில் அரசியல்வாதிகளும் அடங்கியிருந்தனர்.  நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற  ஏ.எச்.எம்.அஸ்வர், முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹசன் அலி, பசீர் சேகு தாவூத், எம்.எஸ்.எம்.அஸ்லாம் ஆகியோரும் இந்த மாநாட்டில பங்கேற்றிருந்தனர். இலங்கை எதிர்ப்புணர்வு காரணமாக தமக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படலாம் என்பதால் தமிழ்நாட்டில் இவர்கள் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இரகசியமாக இருந்து கொண்டுள்ளனர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்வதைத் தவிர்க்கும் வகையில் வழக்கமாக அணியும் மேற்கத்திய உடையை அணியவில்லை. முஸ்லிம்களின் பாரம்பரிய உடையான சாரம், மேற்சட்டை மற்றும் தொப்பி அணிந்து கொண்டே அவர் சென்றுள்ளார். விமானம் மூலம் திருச்சியை சென்றடைந்த அவர், அங்கிருந்து மோட்டார் வாகனம் ஒன்றில் காயல்பட்டினம் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை இந்த மாநாட்டில் உரையாற்றிய ஏ.எச்.எம்.அஸ்வரும் இலங்கை அரசு பற்றியோ  மகிந்த ராஜபக்ச பற்றியோ வாய் கூடத் திறக்கவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

No comments:

Post a Comment