செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011 12:13
'பலன்ரிடியம் கொலி' எனப்படும் இந்தப் பாரிய ஒட்டுண்ணியானது முன்னொருபோதும் இலங்கையரில் கண்டறியப்படவில்லையெனவும் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சகரிக சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஒட்டுண்ணி பன்றிகளின் பெருங்குடலிலேயே வாழ்கின்றது. இது உலகின் மிகப்பெரிய புறட்டோஸோ ஒட்டுண்ணியாகும். பன்றிகளின் மலத்தில் காணப்படுகின்ற இந்த ஒட்டுண்ணி, மாசடைந்த நீர் வழியாக மனித உடலில் நுழைகிறதெனவும் அவர் கூறினார்.
தேசிய வைத்தியசாலையில் நோயாளியொருவரின் மலம் பரிசோதனை செய்யப்பட்டபோது இந்த ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது. இந்த ஒட்டுண்ணி தொற்குள்ளாகியவர்க்கு தோல்நோய் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றன காணப்படுகின்றனவெனவும் சகரிக சமரசிங்க குறிப்பிட்டார்.
இந்த ஒட்டுண்ணி மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளரான துஷாரா தந்திரகே என்பவரால் அடையாளம் காணப்பட்டது.
இதேவேளை, மருத்துவ ஆராய்ச்சி நிலையம் இவரின் உடம்பில் ஒருவகையான நாடாப்புழுவையும் கண்டுபிடித்துள்ளது. (DM)
No comments:
Post a Comment