அதன் போது ஹாலால் முறையிலேயே உணவு
தயாரிக்கப்படுவதாகவும் அதனைப்பற்றிய அறிவிப்பு பலகை கப்பலின் உணவு விடுதியில் வைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுப்பதாகவும் கூறினார்கள்.
மேலும் கப்பலில் பயணம் செய்யும் முஸ்லிம்களின் எண்னிக்கையை முன்னதாகவே அறியத்தந்தால் அவர்களுக்கு ஸஹர் 3 மணிக்கு உணவு ஏற்பாடு செய்துதர நடவடிக்கை எடுக்கிறோம். அவர்கள் கப்பலில் உள்ள உணவகத்திற்கே வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். நோன்பு நோப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான உணவு தயார்செய்து ஒரு குறிப்பிட அறையில் வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று பதில் கூறிய திரு.கோபால் அவர்கள் விரைவில் பயணிகள் காத்திருக்கும் அறையில் குளிர்சாதன வசதி செய்யவுள்ளோம் என்றும் தெரிவித்தார்கள்.
நன்றி காயல் டுடே!
No comments:
Post a Comment