Tuesday, July 12

உலகில் வாழ்க்கைச் செலவு குறைந்த நகரமாக கொழும்பு தெரிவு


 
உலகில் வாழ்க்கைச் செலவு குறைந்த நகரங்களில் ஒன்றாக கொழும்பு நகரம் தரப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் வெளியாகியுள்ளது.
93 நாடுகளிலுள்ள 140 நகரங்களில், கொழும்பு 114 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.வாழ்க்கைச் செலவு குறைந்த நகரங்களாக பாகிஸ்தானின் காராச்சி உட்பட ஆசியாவின் ஆறு நகரங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் வாழ்க்கைச் செலவு கூடிய நகரமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டன், வியட்னாம், ரோம், பேர்லின், ஹொங்கொங், மற்றும் பீஜிங் உட்பட அவுஸ்திரேலியாவின் அநேகமான நகரங்களும் வாழ்க்கைச் செலவு குறைந்த நகரங்களாக உள்ளமை தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment