Friday, July 8

எகிப்தின் சகோதரத்துவ அமைப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளது.


           
   
எகிப்தின் சிறந்த அரசியல் கட்சியான இஹ்வானுல்முஸ்லிமீன் (சகோதரத்துவ அமைப்பு),வெள்ளிக்கிழமைநடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொள்ளப் போவதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது.உடனடியாகச் சீர்திருத்தங்களை கொண்டுவருமாறு கோரிக்கை விடுக்கும் முகமாகவே இவ் ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.மேலும் அரச அதிகாரிகள்,இவ் ஆர்ப்பாட்டமானது சமாதான நோக்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர்.


சகோதரத்துவ அமைப்பின்ஆதரவாளர்கள்,ஒரு மில்லியன் மக்கள் இவ்ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும்,பொலீஸார் பலவந்தமாக நடந்துகொள்வதை எதிர்த்தும்,சீர்தீருத்திருத்தங்களை கொண்டுவருமாறும் மேலும் வெவ்வெறான சில கோரிக்கைளை முன்வைத்துமே இவ் ஆர்ப்பாட்டமானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தற்போது எகிப்தின் ஆட்சிநடவடிக்கைகளை அந்நாட்டின் பாதுகாப்புச் செயலகமே பொறுப்பேற்றுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மார்ச்மாதம் எகிப்தில் இடம்பெற்ற கருத்துக்கணிப்பு ஒன்றில் 77வீதமானோர், இவ்வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வரையில் எகிப்தின் பாதுகாப்புத்செயலக அதிகாரிகளுக்கு, அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு அணுமதி வழங்குவதை எதிர்த்தனர்.




கடந்தவாரம் எகிப்தின் தலைநகர் கைரோவில்பொலீஸாருக்கும்,கல் எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் இடையில் நடந்த மோதல்களினால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்தனர்.இந்நிகழ்வு எகிப்தின் தலைநகரில் பலவாரங்களில் நடைபெற்ற வன்முறைகளில்,மிக மோசமான வன்முறையாகக்  கருதப்படுகின்றது.மேலும் பொலிஸ் படையில் பாரிய மாற்றங்களை கொண்டுவருவதற்குதிட்டமிடப்பட்டுள்ளதாக,எகிப்தின் உள்நாட்டு விவகார அமைச்சர் ஜெனரல் மன்ஸூர் எல் எஸ்ஸாவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment