Tuesday, May 31

தென் கிழக்கு பல்கலையில் விரைவில் பொறியியல் பீடம்




தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உறுதியளித்துள்ளதாக, பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

  உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கதென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இன்று திங்கட்கிழமை  விஜயம் செய்த போதே இந்த உறுதியை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

பொறியியல் பீடத்தை ஆரம்பிப்பதற்கான தேவையான சகல உதவிகளையும் குவைத் அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும் கலாநிதி இஸ்மாயில் தெரிவித்தார்.

தென் கிழக்கு  பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்நுட்ப பிரிவை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்தில் வெற்றிடமாகவுள்ள சில பதவிகளுக்கான நியமனங்களை இன்றைய விஜயத்தின்போது உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வழங்கியதாக கலாநிதி இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தென் கிழக்கு  பல்கலைக்கழகத்தில், வர்த்தக முகாமைத்துவ பீடம், கலை பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் ஆகிய பீடங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Monday, May 30

மக்கள் தமது தாய் மொழிகளில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை இனிமேல் பூர்த்தி செய்யமுடியும்..


  on Monday, May 30, 2011

கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவங்களைத் தாய் மொழியில் பூர்த்தி செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான பணிப்புரைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் நாடாளுமன்ற விவகாரச் செயலாளர் டபிள்யூ. கெ.விலகொட தெரிவித்துள்ளார்.கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற கட்டாய நிலைமை இருந்தது.

இதனைக் கருத்தில் எடுத்துக்கொண்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளை அழைத்து அந்தப் படிவங்களை மக்கள் தமது தாய் மொழியில் பூர்த்தி செய்வதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். எனவே, மக்கள் தமது தாய் மொழிகளில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை இனிமேல் பூர்த்தி செய்யமுடியும். 

அத்துடன் பயணிகள் விமான நிலையங்களில் பூர்த்திசெய்ய வேண்டிய படிவங்களையும் தனித் தாய் மொழியில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Friday, May 27

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கண்டு நடுங்கும் அரசாங்கம்


[ வெள்ளிக்கிழமை, 27 மே 2011, 01:17.23 AM GMT ]
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பிரேரணையொன்றை கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பது அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் நன்மை கருதிய,  பொதுமக்கள் தொடர்புபடும் விடயங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலான தகவல் அறியும் உரிமைச் சட்டமூலமொன்றுக்கான பிரேரணையொன்றை ஐ.தே.க. பிரதித்தலைவர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
அவ்வாறானதொரு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இந்திய அரசியல்வாதிகளின் ஊழல்கள் குறித்து பொதுமக்கள் விபரங்களைக் கோரத் தொடங்கியிருப்பதைப் போன்றதொரு நிலைமை எதிர்காலத்தில் இலங்கையிலும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அரசாங்க உயர்மட்டத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.
அதன் காரணமாக வழமையான பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பிரேரணையை நிகழ்ச்சி நிரலில் இருந்தே அகற்றி விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தப்பித் தவறியேனும் அவ்வாறானதொரு சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துவிட்டால் தாங்கள் மேற்கொண்ட ஊழல்கள்  வெளிவருவது மட்டுமன்றி நிகழ்கால மற்றும் எதிர்கால ஊழல் மோசடி செயற்பாடுகளுக்கும் தடை ஏற்பட்டு விடும் என்று அவர்கள் அஞ்சுவதே அதற்கான காரணமாகும்.

சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அறிமுகப்படுத்த பாராளுமன்றக்குழு இணக்கம்.


26/05/2011 Leave a comment
-பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் MSM.சஜி-
சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அறிமுகப்படுத்த பாராளுமன்றக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று காலை பாராளுமன்றத்தில் அமைச்சர் பசிலுக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையில் நீண்ட நேரப் பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்றது.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக பாராளுமன்றக் குழு ஆராய்ந்ததையடுத்து இறுதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது
சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை பேணுவதென்றும் ,முஸ்லிம்கள் தங்களது நாளாந்த நடைமுறை சமுர்த்தி நடவடிக்கைகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை பின்பற்ற அனுமதி வழங்குவதெனவும் பாராளுமன்றப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Wednesday, May 25

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையின் மொழியாக்கம்


இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையின் மொழியாக்கம்: இணைக்கப்பட்ட பாகங்கள்:01, 02, 03,.. 04, 05, 06, 07,08,09,10,11, 12, 13,14,15,16,17,.. 18,19,20,21,..
ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையினை நாம் மொழியாக்கம் செய்து வெளியிட முயற்சித்திருந்தோம். ஆனால் அதன் மொழியாக்கத்தை கொழும்பில் இருந்து வெளிவரும் 'வீரகேசரி' நாளிதழ் தொடராக வெளியிட தொடங்கியிருந்தது. ஆதலால் அதனை 'புதினப்பலகை' நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றது. இணைக்கப்பட்ட பாகங்கள்:01, 02, 03,.. 04, 05, 06, 07,08,09,10,11, 12, 13,14,15,16,17,..

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

அறிமுகம்:

1.
கருத்து வேறுபாடுகளுக்கிடையே துன்பம் மிகுந்த விதத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது. அதன் இரக்கமற்ற தன்மைக்கு பெயர்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 27 வருடங்களுக்குப் பின்னர் ஆயுதமேந்திய மோதல் முடிவுக்கு வந்ததையிட்டு இலங்கையர் பலரும் உலகம் முழுவதில் உள்ள ஏனையவர்களும் மன ஆறுதல் அடைந்தனர்.

குருடர்களாகவும் , ஊமைகளாகவும் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது கல் வீசவேண்டாம்

25/05/2011 Leave a comment Go to comments



- lankamuslim.org -

இந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள 22 ஆயிரம் மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி நாட்டின் 28 முகாம்களில் நடாத்த தீர்மாணிக்கபட்டு முதல் கட்டத்தில் தெரிவான சுமார் 12 ஆயிரம் பேருக்கு நாட்டில் 28 முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது இந்த பயிற்சி நெறி 18 இராணுவ முகாம்களிலும் 2 கடற் படை முகாமிலும் 2 விமான படை முகாமிலும் 4 காலால் படை முகாமிலும் 2 போலீஸ் முகாமிலும் இடம்பெறுகின்றது ஒரு முகாமிற்கு சுமார் 430 மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி தொடர்பாக கருத்துரைத்துள்ள டாக்டர் அஷ்ஷேய்க் மசீஹுத்தீன் இனாமுல்லாஹ் முகாம்களில் பயிற்சி பெரும் மாணவ மாணவியர் ஆண்கள் , பெண்கள் என்ற வித்தியாசம் இன்றி 25 பயிற்சி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனைத்து பயிற்சி நடவடிக்கைகளும் இடம்பெறுவதாகவும் இந்த விடயத்தில் குருடர்களாகவும், ஊமைகளாகவும் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு கல் வீசவேண்டாம் என்றும் தான் முஸ்லிம்களுக்கு ஆலோசனை தெரிவிப்பதாகவும் விரைவாக அடுத்த கட்ட மாணவர் பயிற்சி ஜூன் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை அனைத்து பல்கலை கழகங்களின் முஸ்லிம் மஸ்லிஸ் மற்றும் ஏனையோர் கண்டிப்பாக அமைச்சர் எஸ். பி .திசாநாயகாவை சந்தித்து ஆண் , பெண்களை பயிற்சி நடவடிக்கைகளில் வேறுபடுத்துவது பற்றி சீரியசாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை முஸ்லிம் அரசியல் வாதிகளை சந்திக்க அவசர அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆண் பெண் கலந்த உடல் பயிற்சி, முஸ்லிம் பெண்களின் உடை, வதிவிடம், ஐந்து வேளைத் தொழுகை , ஜும்மாஹ் தொழுகை ஹலால் உணவு என்பன முஸ்லிம் மாணவ மாணவியரை பெரிதும் பாதிக்கும் பிரச்சினையாக இருக்க மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இராணுவ முகாம்களின் நடாத்தப்படுவது பொதுவான அனைத்து மாணவ மாணவர்களுக்குமான பிரச்சினையாக சுட்டிகாட்டப்பட்டது.

மாணவ மாணவியரை பாதிக்கும் விடையங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் அனைத்து பல்கலை கழகங்களின் முஸ்லிம் மஸ்லிஸ் பிரதிநிதிகள் கடந்த 22.05.2011- அன்று அமைச்சர் எஸ். பி .திசாநாயகாவை அவரின் இல்லத்தில் சந்தித்து பிரச்சினைகளை தெளிவு படுத்தினர் இதன் பின்னர் கருத்துரைத்த அமைச்சர் முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி: ஹலால் உணவுக்கும் ஏற்பாடு முஸ்லிம் மாணவிகள் கலாசாரப்படி உடை அணியவும் அனுமதி என்று தெரிவித்தார் என்பது குறிபிடத்தக்கது.

Tuesday, May 24

இலங்கையில் சல்மான் ருஸ்தியின் நடுநிசி சிறுவர்கள் இரகசியமாக படமாக்கப் பட்டு விட்டது


சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஸ்தி 1981 இல் எழுதி வெளியிட்ட நடுநிசி சிறுவர்கள்- Midnight’s Children- என்ற கதையை இலங்கையில் இரகசியமாக படமாக்கப் பட்டு விட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளது கடந்த மார்ச் மாதம் இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தீடீர் என்று இடை நிறுத்தப்பட்டது இதற்கு ஈரானின் தலையீடு இருந்ததாக இயக்குனர் தீபா மேத்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்தவை தொடர்பு கொண்ட போது அவர் இரு தரப்பு விடையங்களையும் கேட்ட பின்னர் படப்பிடிப்பை தொடருமாறு கோரியதாகவும் தற்போது படமாக்கும் வேலைகள் இலங்கையில் முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்ததாக சர்வதேச செய்திகளை ஆதாரம் காட்டி இலங்கையில் ஆங்கில செய்திகள் வெளியாகியுள்ளன படமாக்கல் நிறைவு பெற்றுள்ளதை இலங்கையில் இந்த படம் தயாரிப்புக்கு பொறுப்பான தி பிலிம் டீம் பிரைவட் லிமிட்டட் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன விரிவாக

இந்த படத்தை சர்வதேச விற்பனை முகவரான FilmNation கம்பெனி அனுசரணையில் கனடாவில் பிரஜா உரிமை பெற்றுள்ள இந்திய பிரபல இயக்குனர் தீபா மேத்தாவும் சல்மான் ருஸ்தியும் கடந்த இரண்டு வருடங்களாக இயங்கிவருவதாகவும் பல இந்திய நடிகர்கள் ஷ்ரியா சரண் ,சீமா பிஸ்வாஸ், ஷாபானா அஸ்மி ,சித்தார்த் சூரியநாராயண் ஆகியோர் பங்கு கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக மனித சமுகத்துக்கு இறுதி தூதுவராக அனுப்பப்பட்ட இறைவனின் இறுதி தூதரையும் இஸ்லாத்தையும் அறிவுக்கு புரம்பான கற்பனைகளை அடிப்படையாக கொண்டு தனது விமர்சனங்கள் என்ற பெயரில் கற்பனை குப்பைகளை உலகிற்கு வழங்கிய சல்மான் ருஸ்தி எழுதிய மற்றுமொரு கதைதான் நடுநிசி சிறுவர்கள் Midnight’s Children- என்ற கதையை படமாக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

1990 களில் BBC நிறுவனம் இந்த கதையை தான் ஐந்து குறுந்தொடர்களாக படமாக்க முயற்சிகளை மேற்கொண்டது இந்த படமாக்கும் வேலையை இலங்கையில் அனுமதி பெற்று தொடங்கிய நிலையில் இலங்கை முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இலங்கையில் படமாக்க வழங்கப்பட்ட அனுமதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்கத்தினால் மீள பெறப்பட்டது இதை தொடர்ந்து BBC நிறுவனம் அந்த படமாக்கல் முயற்சியை கைவிட்டது

அமெரிக்கா இஸ்ரேலின் இரும்பு அரணாக இருக்கும்: ஒபாமா

23-05-2011


இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தான் தெரிவித்த கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார் என்று பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றது நேற்று அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee (AIPAC)யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒபாமா ஐநா சபையின் ஊடாக பலஸ்தீன் தேசத்தை உருவாக்க பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிராகரித்ததுடன் இஸ்ரேலை பாதுகாக்கும் இரும்அரணாக-ironclad- வொசிங்டன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் எதிர்கால கொள்கை தொடர்பில் ஆற்றிய பிரதான உரையின் போது தெரிவித்த இஸ்ரேலின் 1967 ஆம் ஆண்டு எல்லை தொடர்பாகவோ பலஸ்தீன இறையாண்மை தேசம் உருவாக்குவது தொடர்பிலோ எந்த கருத்தையும் வலுவாக முன்வைக்காது முழுமையாக இஸ்ரேலின் புனித பாதுகாவலனாக மட்டும் உரையாற்றியுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர் விரிவாக

இஸ்ரேலின் 1967 ஆம் ஆண்டு எல்லை தொடர்பாக தனது வியாழகிழமை கருத்துக்கு இஸ்ரேலுக்கு சார்பான மெழுகு பூசும் விளக்கத்தை கொடுத்துள்ளார் என்றும் எல்லைகள் தொடர்பில் இருதரப்பும் பேசவேண்டும் விட்டுகொடுப்புகளை செய்யவேண்டும் என்றும் தெரிவித்து தொடர்ந்தும் அமெரிக்கா தனது இஸ்ரேல் சார்பான பிடிவாதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தான் தெரிவித்தமைக்கு இஸ்ரேல் பிரதமர் பின்யமின் நேதன்யாஹு தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன் இஸ்ரேலிய ஆதரவு அமைப்புகள் தமது வலுவான எதிர்ப்பை தெரிவித்தன இதற்கு பதில் தெரிவித்த பலஸ்தீன தரப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் பலஸ்தீன தேசத்தை உருவாக்க ஐநா பொது சபையின் அங்கீகாரம் கோரபோவதாக தெரிவித்தது.

இதற்கு பதிலடியாகத்தான் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஐநா சபையின் வாக்குகள் ஒரு போதும் பலஸ்தீனை உருவாக்காது “No vote at the United Nations will ever create an independent Palestinian state, என்றும் இஸ்ரேலை ஐநாவில் இருந்து வெளியேற்றவோ அல்லது எந்தவொரு சர்வதேச போரத்தில் இருந்து வெளியேற்றவோ மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கா இஸ்ரேலுடன் இருக்கும் ஏனென்றால் இஸ்ரேலின் சட்டபூர்வ தன்மை விவாதத்திற்கு உரிய விடயமல்ல என்று தெரிவித்துள்ளார் இவரின் இந்த உரையை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைப்பில் உரையாற்றிய ஒபாமா பலஸ்தீனர்கள் கைதியாக பிடித்து வைத்துள்ள ஒரு இஸ்ரேல் சிப்பாய்க்கு அதரவாக அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர் இஸ்ரேலின் வதை முகாம்களில் வதைக்கப்படும் பலஸ்தீன சிறுவர் ,சிறுமியர், ஆண்கள் பெண்கள் ,நோயாளர்கள் , வயோதிபர்கள் என்று சுமார் 7 ஆயிரம் பேர் பற்றி எதுவும் பேசவில்லை என்பது ஒபாபாவின் இஸ்ரேல் ஆதரவு பயங்கரவாதத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Monday, May 23

பல்கலைக்கழக மாணவரும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனமும்



இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்காக பயிற்சிகள் மிட்டமிட்டவகையில் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இந்தப் பயிற்சியிலிருந்தும் முஸ்லிம் மாணவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மாணவிகளுக்கு விதிவிலக்கு பெற்றுக்கொடுக்குமாறும் விடுக்கப்பட்ட அத்தனை கோரிக்கைளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய சட்டங்களையும், மற்றும் மாணவர்களுக்கு ஜும்ஆ செல்வதறகான வாய்ப்புகளும் வழங்கப்பட மாடட்டாதென தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்பயிற்சிநெறி குறித்து முஸ்லிம் பெற்றோர்கள் பெரும் கவலை கொண்டிருப்பதாக அறிய வருகிறது.
பயிற்சிநெறிக்கு செல்லாதுவிட்டால் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியை தாம் பெறத்தவறி விடுவோம் என்ற அச்சமும் எமது முஸ்லிம் மாணவர்களிடம் மேலோங்கியுள்ளது. இவ்வாறு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமே இப்பயிற்சிநெறி குறித்து கவலை கொண்டுள்ள நிலை இதுவரை இவ்விவகாரம் குறித்து எந்தவொரு முஸ்லிம் அரசியல் வாதியும் ஆர்வம் செலுத்தாமலிருப்பது பெரும் கவலையை சமூக மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. எம் முஸ்லிம் அரசியல் வாதிகளை நினைத்து நாம் மீண்டுமொருமுறை நொந்து கொள்வதைத்தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லையென்றே தோன்றுகிறது.


பல்கலைக்கழக நுழைவு அனுமதி பெற்ற மாணவர்களுக்கான கட்டாய தலைமைத்துவப் பயிற்சி முகாம்களை ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்போவதாக இலங்கை உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அவற்றை பின்போடுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் கேட்டிருந்தபோதிலும், அந்த பயிற்சிகளை தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி நடத்தப் போவதாக இலங்கை கல்வியமைச்சின் செயலாளர் சுனில் நவரட்ண தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்களில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருக்கும் இந்த பயிற்சிகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் இந்த முதல்கட்ட பயிற்சி முகாம்களை பின்போடுவது குறித்து பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. ஆனால், அப்படி பின்போடுவதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று நவரட்ண தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாங்கள் ஏற்கனவே 90 மில்லியன் ரூபாய்களை செலவிட்டு விட்டதால் நாம் இதனை நிறுத்த முடியாது. இதனை நிறுத்தினால் அதனால் பொது நிதிக்கு பெரும் இழப்பு ஏற்படும். அத்துடன் இதற்காக பல பயிற்சி நிலையங்களை நாங்கள் எடுத்திருக்கிறோம், அவற்றை ரத்துச் செய்தால் அதனாலும் பெரும் இழப்பு ஏற்படும் என்று நவரட்ண தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகளை இராணுவ முகாம்களின் நடத்தும் இந்தத் திட்டத்துக்கு மாணவர் அமைப்புக்கள் மற்றும் பல தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அதனை நிறுத்துமாறு கோரி மாணவர் அமைப்பு ஒன்று இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

Sunday, May 22

வடகிழக்கில் தொடரும் நில அபகரிப்புக்கான சூழ்ச்சிகள்

கந்தரோடையில் பௌத்த ஆதாரம் கிடைத்தது என்கிறது சிங்களப் பத்திரிகை – மறுக்கிறார் புஷ்பரட்னம்




லங்காதீப என்ற சிங்களப் பத்திரிகை தனது 17ஆம் திகதிய ..


யாழ். மாவட்டம், கந்தரோடையில் இடம்பெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொடர்பில் சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளியான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் இந்தச் செய்தி தொடர்பில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் புஷ்பரட்னம் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
கந்தரோடையில் புராதன காலத்துக் குடியிருப்பு மற்றும் பௌத்த குருமாரின் புராதன வாழ்விடம் என்பன அமைந்திருந்தமைக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க தெரிவித்தார் என்று லங்காதீப என்ற சிங்களப் பத்திரிகை தனது 17ஆம் திகதிய பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியை யாழ்.பல்கலைக்கழக தொல்லியல்துறை மறுத்துள்ளது. அதேவேளை, குறித்த செய்தி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அது பொய்யான செய்தி கலாசார அமைச்சின் அனுமதியின்றி நாம் எந்தவொரு ஆய்வு முடிவுகளையும் வெளியிடுவதில்லை என்று தெரிவித்தார் பிரதி ஆணையாளர் நிமல் பெரேரா.
அத்தகைய எந்த ஒரு ஆதாரமும் கந்தரோடையில் இருந்து இதுவரையில் பெறப்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை என்று யாழ். பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வுத்துறையும் அடித்துக் கூறியது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் பெருங்கற் கால பண்பாட்டை ஒத்ததானகுடியிருப்புக்கள் அங்கிருந்ததற்கான ஆதாரங்களே கிடைத்துள்ளன. பௌத்த அடையாளத்துக்கான எவையும் கிடைக்கவில்லை. அண்மையில் வெண்கலச் சூலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது” என்று ஆய்வுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘கந்தரோடையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வுப் பிரிவின் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் மாணவர்களும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்” என்று லங்காதீப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணத்திடம் கேட்டபோது, ‘ஆய்வின் இறுதியில் பல்கலைக்கழகமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து முடிவுகளை வெளியிடுவது என்பதே ஒப்பந்தம். அப்படியிருக்கையில் இப்படி ஒரு செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது” என்றார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள கந்தரோடை தொல்லியல் சான்றுகள் புத்த சமய காலத்திற்கு முற்பட்ட பெருங்கற்காலத்திற்குரியவை என்று பல வரலாற்று ஆய்வாளர்களும் வரலாற்றுப் பேராசிரியர்களும் தெரிவித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் மிகப் பழைய நகராக்கத்திற்குரிய ஆதாரமாக அமைந்துள்ள இந்தச் சான்றுகள் தமிழ்பௌத்தத்திற்குரியவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Saturday, May 21

தலைமைத்துவ பயிற்சி திகதியில் மாற்றம் இல்லை




பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள மாணவர்களுக்காக நடைபெறவுள்ள தலைமைத்துவ பயிற்சி திட்டமிட்டபடி எதுவித தாமதமுமின்றி நடைபெறும் என உயர்கல்வி அமைச்சர் எஸ். பி .திசாநாயக தெரிவித்துள்ளார். முன்னதாக அறிவிக்கபட்டதற்கிணங்க எதிர்வரும் 23 ஆம் திகதி பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

முதன்முறையாக பலகலைக்கழக மாணவர்களுக்காக இராணுவ முகாம்களில் நடைபெறவுள்ள பயிற்சிகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணமுள்ளன. இந்த பயிற்சிகளுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் 7 நாட்களுக்கு இந்த பயிற்சியை பிற்போடுவது தொடர்பாக கவனம் செலுத்துமாறு சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

Friday, May 20

ஐந்து நேரம் தொழலாம்; ஜும்ஆவுக்குச் செல்ல முடியாது – மேஜர் ஜெனரல் பீரிஸ் (EXCLUSIVE)
வியாழக்கிழமை, 19 மே 2011 16:07


இவ் வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டாய வதிவிட தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று அது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு ஒன்று உயர் கல்வி அமைச்சில் நடைபெற்றது.


உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் இப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.





இப் பயிற்சி நெறியில் கலந்து கொள்வது தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த இப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மேஜர் ஜெனரல் எம்.பி. பீரிஸ் முஸ்லிம் மாணவர்கள் ஐந்து நேரமும் தொழுவதற்கு அனுமதிக்கப்படும் எனவும் ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.



மாணவர்கள் தத்தமது சமய அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கு எந்தவித தடைகளும் இல்லை. ஆனால் அதற்காக அவர்களை வெளியில் அனுப்புவதற்கு எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.


முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை – அமைச்சர் எஸ்.பி

இதேவேளை இப் பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பல முஸ்லிம் மாணவர்களும் பெற்றோரும் இப் பயிற்சி நெறி தொடர்பில் தம்மிடம் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையுமே வெளிப்படுத்தியுள்ளதாகவும் எவரும் இதனை எதிர்மறையாக நோக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.


இது தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்ற போதிலும் திட்டமிட்ட படி இப் பயிற்சி நெறி நடைபெறும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இராணுவ முகாம்களில் நடத்தப்படுகிறது என்பதற்காக இது ஒருபோதும் இராணுவப் பயிற்சியாக அமையமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.


மாணவர்கள் காலையில் 5 மணிக்கு தூக்கத்தை விட்டு எழும்ப வேண்டும் எனவும் இரவு 10.45 மணிக்கு தூக்கத்திற்குச் செல்ல வேண்டும் எனவும் அதற்கிடைப்பட்ட காலப் பகுதியில் அவர்களுக்கு நேர முகாமைத்துவம், ஒழுக்க விழுமியங்கள், மற்றவர்களை அணுகும் முறை, தங்குமிடத்தை ஒழுங்குபடுத்துதல், உடங்பயிந்சி, ஆடை அணியும் முறை, தலைமைத்துவக் கட்டுப்பாடு உள்ளிட்ட வாழ்க்கைக்கு அத்தியவசியமான விடயங்கள் கற்பிக்கப்படவிருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.


இதேவேளை மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துடன் இப் பயிற்சி நெறிக்காக கொண்டு வரப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல் தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


அப் பொருட்கள் அனைத்தையும் ஒருவர் புதிதாக கொள்வனவு செய்ய வேண்டுமானால் சுமார் 15000 ரூபா தேவைப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர், மாணவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பாவனைப் பொருட்களையே கொண்டு வருமாறு கூறியுள்ளதாகவும் புதிதாக பொருட்களை வாங்கி வர வேண்டிய அவசியம் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.


சட்டத்துக்கு முரணானது – ஐ.தே.க


இதற்கிடையில் இன்றைய தினம் கொழும்பில் இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியது.
இங்கு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. தேசிய இளைஞர் முன்னணியின் கல்விக் குழுத் தலைவர் தம்மிக விக்ரம ஆராச்சி, இக் கட்டாய பயிற்சி நெறியானது பல்கலைக்கழக சட்டவிதிமுறைகளுக்கு முரணானது எனக் குறிப்பிட்டார்.


இது ஒரு இராணுவப் பயிற்சி அல்ல எனும் அமைச்சரின் கருத்தை மறுத்துரைத்த அவர், அப்படியானால் ஏன் ரீ சேட்களையும் அiரைக் காற்சட்டைகளையும் கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.


வழக்குத் தாக்கல் செய்வோம்- அ.ப.மா.ஒன்றியம்


இதேவேளை இப் பயிற்சி நெறிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.


அத்துடன் உயர் கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் கடிதம் சிங்கள மொழியில் உள்ளதால் தமிழ் மொழி மூல மாணவர்கள் அதனை விளங்கிக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, May 19

உலகின் முக்கிய தினங்கள்...


ஜனவரி
26 - உலக சுங்க தினம்
30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி
14 - உலக காதலர் தினம்

மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல்
05 - உலக கடல் தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
இதுவரை தங்களின் கூகுள் தேடல்கள் அனைத்தையும் காண வேண்டுமா?



இதுவரை தாங்கள் கூகுள் தேடல் இயந்திரம் (Google Search Engine) மூலம் தேடிய அனைத்து தகவல்களையும் காண ஆவலாக உள்ளீர்களா, நண்பர்களே!

ஓர் தகவலை தேட, கூகுள் தேடல் (Google Search Engine) இயந்திரத்தை பயன்படுத்துவரும், கூகுள் அக்கொண்டையையும் (Google Account) கொண்டவரா தாங்கள்? ஆம் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான், நண்பா.

கடந்த காலங்களில் ஏதேனும் ஓர் மிக முக்கிய தகவல் ஒன்றை மிகவும் சிரமம் பட்டு கூகுள் தேடல்(Google Search Engine) இயந்திரம் மூலம் தேடி, அதற்கான விடையும் பெற்று பயன்பெற்று இருப்பிர்கள். ஆனால் அதே தகவல் தங்களுக்கு மீண்டும் தற்போது வேண்டும். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள், என்ன மீண்டும் அதிக நேரத்தை செலவழித்து அதை கடினபட்டு கண்டுபிடிக்க எண்ணினால், அந்த எண்ணத்தை விட்டுவிடுங்கள். தற்போது காலகட்டத்தில் நேரம் மிக முக்கிய ஒன்று. மிக எளிதாக இந்த வேலையை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் தங்களுக்கு உதவி புரிகிறது.

இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்க Google History. பின்னர் தோன்றும் விண்டோவில் தங்களது கூகுள் அக்கொண்ட் மூலம் நுழைந்து கொள்ளுங்கள். யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்(Username, Password) தந்து. பின்னர் தங்களுக்கான தேடல் தகவல் அனைத்தும் அங்கு தரப்பட்டு இருக்கும். மேலும் கடந்த மாதம் அல்லது ஆண்டு தேடல் தகவலை பெற எண்ணினால், வலதுகை ஓரத்தில்(Left Side) ஓர் சிறிய நாள்காட்டி(calendar) இருப்பதை தாங்கள் காணலாம்.அதில் தங்களுக்கு எந்த நாளில் தாங்கள் மேற்கொண்ட தேடல் தகவல் வேண்டுமோ அதை தேர்வு செய்து காணலாம்.

கைத்தொலைபேசிகளில் தமிழ் இணையத்தளங்களை பார்வையிட முடியவில்லையா?


பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில்உண்டு.

ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.
ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.
தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.
நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.
கீழுள்ள தளத்திற்கு சென்று பதிவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.

மஸ்ஜிதுல் அக்ஸாவின் ‘அதானை’ தடை செய்து மஸ்ஜித்தையும் மூடத் திட்டம் !!

OurUmmah: இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபை ஜெருசலத்தில் அமைத்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் பாங்கு சொல்வதை தடை செய்ய முயன்று வருவதாககுற்றம் சாட்டப்பட்டுள்ளது மஸ்ஜிதுல் அக்ஸாவில் ‘அதான்’ சொல்வது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளை தொந்தரவு பண்ணுவதாகவும் நடு நிசியில் தமது தூக்கத்தை குழப்புவதாகவும் அவர்கள் கடந்த ஒரு வருடமாக முறையிடுவதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரிகள்

முஸ்லிம் பல்கலை கழக மாணவர்கள் குற்றச்சாட்டு

பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்துள்ள சகல மாணவர்களுக்கும் உயர்கல்வியமைச்சு கடிதங்களை விநியோகித்துள்ளது. தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பது பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான கட்டாயமான தகைமையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது lankamuslim.org யை தொடர்பு கொண்ட சில முஸ்லிம் பல்கலை கழக மாணவர்கள் முஸ்லிம் தலைமைகள் இந்த விடையத்தில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதாக தெரியவில்லை என்று தமது கவலையை வெளிப்படுத்தியதுடன்
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உப தலைவரை தாம் தொடர்பு  கொண்டதாகவும் அதன்போது இந்த தலைமைத்துவப் பயிற்சி திட்டம் தொடர்பாக ஜம்மியதுல் உலமா சபை உப தலைவர் தாம் ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளபோதும் அதன் விபரங்கள் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர் விரிவாக
தலைமைத்துவப் பயிற்சித் திட்டத் தீர்மானத்தால் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்கும் ஆர்வத்தை பெருந்தொகையான மாணவர்கள் இழந்துவிடுவார்களென கல்வித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல்கலைக்கழகத்திற்கு புதிதாக அனுமதி பெறுவோருக்கு இராணுவ முகாம்களில் கட்டாயமாக தலைமைத்துவப் பயிற்சியளிப்பது தொடர்பாக உயர்கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு கல்வித்துறை அதிகாரிகள் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் குறித்து பெருந்தொகையான பெற்றோர்களும் மாணவர்களும் தமது மகிழ்ச்சியீனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இராணுவ முகாம்களில் வதிவிடப் பயிற்சியை மேற்கொள்வது தொடர்பாக அவர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலி னும் தெரிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது மாணவர்களுக்குப் பயிற்சித் திட்டத்தைக் கட்டாயமாக்குவதற்கான அதிகாரம் உயர்கல்வியமைச்சோ அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவோ கொண்டிருக்கவில்லையென ஸ்ராலின் குறிபிட்டுள்ளார்.

கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி கொடியேற்றமும்! ஈமானை இழக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளும்!


அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
இஸ்லாமிய மார்க்கம் பாவச் செயல்களில் மிகப் பெரிய பாவமாகக் கருதுவது இறைவனுக்கு இணை கற்பிப்பதாகும். இப்பாவம் இஸ்லாத்தின் பார்வையில் மிகக் கொடியதாகும்.
ஒருவர் ஒரு மனிதனை வணங்குவதோ அல்லது அந்த மனிதனிடம் கடவுள் தன்மை உள்ளது என்று நம்புவதோ, அவர் மரணித்த பின் அவரது மண்ணறையை புனிதமாகக் கருதுவதோ, அதை கட்டி வைத்துக் கொண்டு சுற்றி வருவதோ, அக்கல்லறையை தொட்டு முகர்வதோ, எண்ணெய் தடவுவதோ, அவரிடத்தில் தமது தேவையை நிறைவேற்றித் தருமாறு பிரார்த்திப்பதோ, அவருக்காக அறுத்துப் பலியிடுவதோ, அவருக்காக நேர்ச்சை வைப்பதோ, அவரின் பேரில் சத்தியம் செய்வதோ அக்கல்லறையை நோக்கி நேர்சை செய்து பிரயானம் செய்வதோ இணை வைத்தல் எனும் கொடிய பாவத்தைச் சேர்ந்தவைகளாகும் என இஸ்லாம் குறிப்பிடுகின்றது.
இணை வைத்தல் பற்றி அல்குர்ஆன்
மன்னிக்கப்படாத குற்றம்இறைவன் அல்குர்ஆனில் இணை வைத்தல் எனும் பாவத்தைத் தவிர உள்ள பாவங்களை தாம் நாடியவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பபதாகக் குறிப்பிடுகின்றான். ‘நிச்சயமாக அழ்ழாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத்தவிர (மற்ற)எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அழ்ழாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்துவிட்டார்.’(அல்குர்ஆன் 4:48)‘நிச்சயமாக அழ்ழாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத்தவிர (மற்ற)எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அழ்ழாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக வெகு தூரமான வழி கேடாக வழிகெட்டுவிட்டார்.’ (அல்குர்ஆன் 4:116

Wednesday, May 11

                              Ancient Colombo pictures
















பலஸ்தீன அமைப்புகள் நல்லிணக்க ஒப்பந்தம் செய்துள்ளது

பலஸ்தீன அமைப்புகள் நல்லிணக்க ஒப்பந்தம் செய்துள்ளது


May 06, 2011.... jaleel
பலஸ்தீன போராளிகள் அமைப்புகள் மத்தியில் நல்லிணக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்துயிடப்பட்டுள்ளது இந்த ஒப்பந்தம் எகிப்தின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்றுள்ளது அந்த நல்லிணக்க ஒப்பந்தத்தில் ஹமாஸ், அப்பாசின் பி.எல்.ஒ மற்றும் இஸ்லாமிய ஜிஹாத், பலஸ்தீன் போராட்ட முன்னனி ஆகிய அமைப்புக்கள் நேற்று முன் தினம் கையெழுத்திட்டுள்ளது.

ஒஸாமா ஏற்கனவே வபாத்தாகிவிட்டார் - ஈரான்

May 10, 2011.... AL-IHZAN World News

அல் கைதாவின் தலைவர் ஒஸாமா பின்லேடன் இயற்கை மரணமடைந்து வருடங்கள் கடந்துவிட்டதென தெரிவித்த ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்கா ஆடியவை அனைத்தும் நாடகமென விளக்கினார். போரில் அடைய முடியாத இலட்சியத்தை அமெரிக்கா இயற்கை மரணத்தில் அடைந்து கொள்ள எடுத்த பொய்யான நாடகமே ஒஸாமா பின்லேடனை சுட்டுக்கொன்றதாக விடுத்த அறிவித்தல் என்றும் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கடுமையாகச் சாடினார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நீண்டு செல்லும் பிரயோசமில்லாத போரை அமெரிக்க மக்கள் வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அதிகரித்துச் செல்லும் போர் செலவீனகளால் அமெரிக்காவின் பொருளாதாரம் நலிவடைந்து செல்கின்றது. இதனால்..........
ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து செல்கின்றது.

இவற்றை மூடிமறைக்கவே இயற்கையாக என்றோ மரணமடைந்த ஒஸமா பின்லேடனை தாங்கள் அண்மையில் சுட்டுக் கொன்றதாக அறிவித்தது அது உண்மையான ஒஸாமா பின்லேடனாக இருந்தால் ஏன் பிரேதத்தைக் காட்டவில்லை. டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படவில்லை.

இவ்வளவு வேகமாக கடலில் அடக்கம் செய்தனர். கடலுக்குள் அடக்கம் செய்தல் இஸ்லாமிய முறையல்ல. அடக்கம் செய்கையில் முஸ்லிம் உலமா கலந்து கொண்டாரா? எந்த ஒரு நாடும் ஒஸமாவை அடக்கம்செய்ய இடம் தர வில்லையென்றால் எந்த நாடுகளிடம் இதற்கான அனுமதி கோரப்பட்டதென்ற விபரங்களை வெளியிடாதது ஏன் என்ற கேள்விகளை ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்தார்.

Kalmunai News

Kalmunai News

Kulkudah Times

Kulkudah Times

Sammanthurai News

Sammanthurai News

Maruthamunai Online

Maruthamunai Online

Online Akkaraipattu

Online Akkaraipattu

Addalaichenai News

Addalaichenai News


Pottuvil News

Pottuvil News


Jaffna Muslim

Jaffna Muslim

Meelparvai

Meelparvai


Vidivelli E-Paper

Vidivelli E-Paper


Know the secrets of any company or jobs

glassdoor

http://www.glassdoor.com/ இந்த தளத்திற்கு சென்று எந்த கம்பெனி பற்றிய தகவல் வேண்டுமோ அதை தேடுதலில் (Search) கொடுத்தால், அந்த கம்பெனி பற்றி அங்கே பணியாற்றுபவர்கள் கொடுத்த தகவலை படிக்க முடியும் மேலும் ஏதேனும் தெரிவிக்க வேண்டும் என்றாலும் அதை தெரிவிக்கலாம்.

அது மட்டும் அல்லாமல் அந்த கம்பெனி நடத்தும் நேர்காணல்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு : ஒருவேளை நீங்கள் ஏதேனும் உண்மையை பகிர விரும்பினால் உங்களுடைய விவரங்கள் பாதுகாக்க படும் எனவே அச்சம் இன்றி உங்கள் கருத்தை முன்வைக்கலாம்.

Glassdoor.com is a career and workplace community where anyone can find and anonymously share real-time reviews, ratings and salary details about specific jobs for specific employers — all for free.