[ வெள்ளிக்கிழமை, 27 மே 2011, 01:17.23 AM GMT ]
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பிரேரணையொன்றை கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பது அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் நன்மை கருதிய, பொதுமக்கள் தொடர்புபடும் விடயங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலான தகவல் அறியும் உரிமைச் சட்டமூலமொன்றுக்கான பிரேரணையொன்றை ஐ.தே.க. பிரதித்தலைவர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
அவ்வாறானதொரு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இந்திய அரசியல்வாதிகளின் ஊழல்கள் குறித்து பொதுமக்கள் விபரங்களைக் கோரத் தொடங்கியிருப்பதைப் போன்றதொரு நிலைமை எதிர்காலத்தில் இலங்கையிலும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அரசாங்க உயர்மட்டத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.
அதன் காரணமாக வழமையான பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பிரேரணையை நிகழ்ச்சி நிரலில் இருந்தே அகற்றி விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தப்பித் தவறியேனும் அவ்வாறானதொரு சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துவிட்டால் தாங்கள் மேற்கொண்ட ஊழல்கள் வெளிவருவது மட்டுமன்றி நிகழ்கால மற்றும் எதிர்கால ஊழல் மோசடி செயற்பாடுகளுக்கும் தடை ஏற்பட்டு விடும் என்று அவர்கள் அஞ்சுவதே அதற்கான காரணமாகும்.

No comments:
Post a Comment