முஸ்லிம் பல்கலை கழக மாணவர்கள் குற்றச்சாட்டு
பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்துள்ள சகல மாணவர்களுக்கும் உயர்கல்வியமைச்சு கடிதங்களை விநியோகித்துள்ளது. தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பது பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான கட்டாயமான தகைமையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது lankamuslim.org யை தொடர்பு கொண்ட சில முஸ்லிம் பல்கலை கழக மாணவர்கள் முஸ்லிம் தலைமைகள் இந்த விடையத்தில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதாக தெரியவில்லை என்று தமது கவலையை வெளிப்படுத்தியதுடன்
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உப தலைவரை தாம் தொடர்பு கொண்டதாகவும் அதன்போது இந்த தலைமைத்துவப் பயிற்சி திட்டம் தொடர்பாக ஜம்மியதுல் உலமா சபை உப தலைவர் தாம் ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளபோதும் அதன் விபரங்கள் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர் விரிவாக
தலைமைத்துவப் பயிற்சித் திட்டத் தீர்மானத்தால் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்கும் ஆர்வத்தை பெருந்தொகையான மாணவர்கள் இழந்துவிடுவார்களென கல்வித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல்கலைக்கழகத்திற்கு புதிதாக அனுமதி பெறுவோருக்கு இராணுவ முகாம்களில் கட்டாயமாக தலைமைத்துவப் பயிற்சியளிப்பது தொடர்பாக உயர்கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு கல்வித்துறை அதிகாரிகள் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் குறித்து பெருந்தொகையான பெற்றோர்களும் மாணவர்களும் தமது மகிழ்ச்சியீனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இராணுவ முகாம்களில் வதிவிடப் பயிற்சியை மேற்கொள்வது தொடர்பாக அவர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலி னும் தெரிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது மாணவர்களுக்குப் பயிற்சித் திட்டத்தைக் கட்டாயமாக்குவதற்கான அதிகாரம் உயர்கல்வியமைச்சோ அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவோ கொண்டிருக்கவில்லையென ஸ்ராலின் குறிபிட்டுள்ளார்.