உலகில் தோல்வியுற்ற நாடுகளின் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை 28வது இடத்தைப் பிடித்துள்ளது.
வொசிங்டனை தளமாக கொண்ட அமைதிக்கான நிதியம் என்ற சிந்தனைக் குழாம்
ஆண்டுதோறும் தோல்வியுள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
தோல்வியுற்ற நாடுகளின் இந்த ஆண்டுக்கான பட்டியலில் 178 நாடுகள் தொடர்பாக
கணிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் இலங்கை 28 வது இடத்தில் உள்ளது. இலங்கை 92.9 புள்ளிகளுடன் எச்சரிக்கைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டில் 93.1 புள்ளிகளுடன் இலங்கை 29வது இடத்தில் இருந்தது.
இந்தப் பட்டியலில் சோமாலியா முதலிடத்தில் உள்ளது. கடைசி இடத்தில்
பின்லாந்து உள்ளது. பாகிஸ்தான் 13வது இடத்திலும். பங்களாதேஸ் 29வது
இடத்திலும், நேபாளம் 30வது இடத்திலும், இந்தியா 79வது இடத்திலும், மாலைதீவு
88வது இடத்திலும் உள்ளன.
No comments:
Post a Comment