திருகோணமலை புல்மோட்டை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபன முஸ்லிம் ஊழியர்களில்
சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த இரு
நாட்களாக இடம்பெற்றுவந்த உண்ணா விரதப் போராட்டம் இன்று காலை முடிவிற்கு
வந்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீளச் சேவையில் இணைத்துக் கொள்வதாக
கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிஸான்
குணசேகர அறிவித்ததைத் தொடர்ந்தே உண்ணா விரதப் போராட்டம் முடிவிற்கு
வந்துள்ளது.
இதேவேளை, குறித்த வாக்குறுதி தவறும் பட்சத்தில் பாரிய அளவில் தொடர்
உண்ணாவிரதப்போராட்டத்தில் தாம் குதிக்கவுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட
தரப்பினர் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment