இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சர்வதேச விமான நிலையமான மத்தள
ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கான தனது விமான பயணச் சேவைகளை எயார்
அரேபியா விமான சேவைகள் நிறுவனம் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ
நிறுத்தியுள்ளது.
சார்ஜாவில் இருந்து விமான சேவைகளை தொடரும் குறித்த விமான சேவைகள்
நிறுவனத்தின் இணையத்தளம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இணையத்தளம்
வெளியிட்டுள்ள குறித்த விமான சேவை நிறுவனத்தின் சேவைகளின் வரைபடத்தில்
இலங்கைக்கான சேவையானது கொழும்புக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மஹிந்த ராஜபக்ஷ விமான
நிலையத்தில் சேவையிலிருந்த ஒரே ஒரு வெளிநாட்டு விமான சேவை நிறுவனம் எயார்
அரேபியா என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
.
No comments:
Post a Comment