Saturday, May 18

'வெள்ளை சீனியில் 'கெட்மியம்' எனும் இரசாயனப் பதார்த்தம்'


வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்படும் வெள்ளை நிற சீனியில் ‘கெட்மியம்’ எனும் இரசாயனப் பதார்த்தம் அடங்கியுள் ளதாக விவசாய அமைச்சு மேற்கொண்ட பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறையிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீனி மற்றும் பால்மா என்பவற்றில் இரசாயனப் பதார்த்தங்கள் கலந்துள்ளதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இலங்கைக்கு பிரேசில், சிங்கப்பூர் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து வெள்ளைச் சீனி இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றின் மாதிரிகள் விவசாய அமைச்சினால் பரிசோதனைக்குட் படுத்தப்பட்டன.
இவற்றில் கெட்மியம் எனும் இரசாயனப் பதார்த்தம் இருப்பது உறுதியானதாக கூறிய அமைச்சர், இதனையடுத்து அது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சீனியில் 90 வீதமானவை வெள்ளை நிற சீனியாகும்.

No comments:

Post a Comment