ஹலால்
விடயம் தொடர்பில் மீண்டும் உடனடியாக தலையிடுமாறு பாதுகாப்பு செயலாளரையும்
ஜனாதிபதியையும் பொது பல சேனா பொதுச் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர்
வலியுறுத்தியுள்ளார்.
பதுளையில் நேற்று நடைபெற்ற அவ்வமைப்பின்
பொதுக் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே கலகோட அத்தே ஞானசார தேரர்
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .கடந்த காலங்களில் மதத் தலைவர்களை ஒன்று
சேர்த்து ஹலால் விடயத்தில் காணப்பட்ட உடன்பாடானது ஒரு ஏமாற்று
நடவடிக்கையாகும்.
எனவே ஹலாலுக்கு எதிரான எதிர்ப்பு
நடவடிக்கையை மீண்டும் நாம் ஆரம்பிக்க வேண்டும் என அவர் மேலும்
குறிப்பிட்டார். என்று செய்தி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment