Sunday, May 5

மின்சார கட்டணங்களை செலுத்தாதீர்கள் - ஐக்கிய பிக்குகள் முன்னணி உபதேசம்


மக்கள் மின்சாரக் கட்டணங்களை செலுத்தக் கூடாது என ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.  நாட்டின் அனைத்து மக்களும் மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதனை புறக்கணிக்க வேண்டுமென ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் தினியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.இலங்கை மக்கள் மிகவும் அமைதியாக இருந்து பழகிவிட்டதாகவும், அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மக்களைப் போன்று மிகவும் அமைதியானவர்கள் உலகில் வேறு எங்கும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் வரையில் மக்கள் கட்டணங்களை  ெலுத்துவதனை தவிர்க்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் மே தினமன்று அறிவிக்கப்பட்ட கட்டணச் சலுகையானது போலியானது எனவும் இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

No comments:

Post a Comment