அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லும் தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடை யாது என அமைச் சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சில ஊடகங்கள் நான் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லவுள்ளதாகவும் அரசுக்கு
அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் செய்திகள் பிரசுரமாகின. இது முற்றிலும்
தவறானது எமக்குள் சில கருத்துக்கள், விமர்சனங்கள் உள்ளன. என்றாலும்
அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்லும் தேவை எமக்கு இல்லை என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment