Monday, May 6

ஆசாத் சாலியின் வீட்டுக்கு சென்ற றிசாத் பதியுதீன்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னால் பிரதி தலைவரும், தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவருமான ஆசாத் சாலியின் வீட்டுக்கு சற்று முன்னர் (இரவு 11.00 மணியளவில்), அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,அ.இ.மு.கா.செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்,கட்சியின் அதி உயர் பீட உறுப்பினர்களான தொழிலதிபர் எஸ்.கே.பீ.அலாவுதீன், டாக்டர்.சாஜஹான் ஆகியோர் சென்று அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தமது கவலையினை தெரிவித்துள்ளதுடன், தமது கட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக கூறியுள்ளனர்.
ஆசாத் சாலி அவர்கள் முஸ்லிம்களுக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள தமிழ், சிங்கள மக்களுக்காகவும் குரல் கொடுத்துவரும் ஒருவர் என்ற வகையில் அண்மையில் அவரது செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆசாத் சாலி அவர்கள் கடந்த 2 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் விசாரைணைக்கென ஆழைத்து செல்ல்பட்டு 4 ஆம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை டுபாய்க்கு பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் உடனடியாக ஆசாத் சாலி அவர்களின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது ஆழ்ந்த கவலையினை வெளியிட்டிருந்தார்.
ஆசாத் சாலியின் வீட்டுக் சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலனா குழுவினரிடத்தில், ஆசாத் சாலி அவர்களின் கைது அநீதியானது என்பதை மீண்டும் அவரது மனைவி  உள்ளிட்ட குடும்பத்தினர் சுட்டிக்காட்டினர். இன்று தமது கணவரை பார்ப்பதற்கு அவர் விசாரணை செய்யப்படும் இடத்துக்கு சென்ற போது,அதற்கு அனுமதியளிக்கப்படவில்லையென்றும், அவருக்காக கொண்டு சென்ற துணிமணிகளை அதிகாரிகள் பொறுப்பெடுத்து அதனை ஒப்படைத்ததாகவும் இங்கு தெரிவிக்கப்ட்டது.

No comments:

Post a Comment