ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை
முன்னணி உட்பட எதிர்க்கட்சிகள் பலவற்றின் தொழிற்சங்கங்கள் இந்த வேலை
நிறுத்தத்தில் பங்குபற்றவுள்ளன. அரசின் பங்காளிக் கட்சிகளான இலங்கை
கமியுனிஸ்ட் சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கங்களும் இதில் பங்குபற்றவுள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பின் இவ்வாறான வேலை
நிறுத்தம் ஒன்று நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 1980ஆம் ஆண்டு வேலை
நிறுத்தத்திற்கு பின் பொது வேலை நிறுத்தம் ஒன்று நடைபெறும் முதற்
சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேநேரம், கடந்த புதனன்று இடம்பெற்ற பல
கட்சி எதிர்ப்பு ஊர்வலத்திலும் தாம் எதிர்பார்த்ததைவிட பெருந்தொகையான
மக்கள் கலந்து கொண்டதாக ஐ.தே.க. கொழும்பு மத்தி அமைப்பாளர் மாகாண சபை
உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் தெரிவித்தார்.
No comments:
Post a Comment