வெலிகமை பிரதேசத்தில் அண்மையில்
இனவாதிகளால் முஸ்லிம் எதிர்ப்பு துண்டுப்பிரசுரம் ஒன்று
வெளியிடப்பட்டுள்ளது. இந்த துண்டுப்பிரசுரம் சிங்கள மொழியில்
வெளியாகியிருந்தது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் முஸ்லிம்
வியாபார நிலையங்களில் பொருள் வாங்க வேண்டாம் என கூறப்பட்டதோடு முஸ்லிம்
வியாபார நிலையங்களின் பெயர் பட்டியலும் அதற்கு மாற்றீடாக சிங்கள வியாபார
நிலையங்களின் பெயர் பட்டியலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
அத்துடன் “முஸ்லிம் வியாபார
நிலையங்களில் தொழில் புரியாதீர்” மற்றும் முஸ்லிம்கள் நாம் வியர்வை சிந்தி
சம்பாதித்த பணத்தை வைத்தே நம் விகாரைகளை உடைத்து பள்ளிகளை கட்டுகின்றனர்”
போன்ற விடயங்களும் இந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த துண்டுப்பிரசுரம் வாசகர் பார்வைக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.
About these ads
No comments:
Post a Comment