Monday, April 1

ஃபெஷன் பக் தாக்குதலில் கோடீஸ்வர வியாபரி ஒருவர் சம்பந்தம்


Fashion-Bugபிக்குகள் மூவரையும் கைது செய்வதற்கான சோதனைகள் தொடர்கின்றன. பெபிலியான ஃபெஷன் பக் நிறுவனத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வியாபாரி உட்பட 6 பேரை நுகேகெடை பதில் நீதிவான் நீதிபதி திஸ்ஸ விஜேரத்ன அவர்களால் தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இன்னும் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த 6 சந்தேக நபர்களும் பெபிலியான பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். பத்திரிகையாளர்களால் எடுக்கப்பட்ட படங்களை பரிசோதிக்கையில் இத்தாக்குதலில் தொடர்புபட்ட மூன்று பிக்குகள் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இன்னும் இத்தாக்குதலுடன் தொடர்புடை பலர் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர்கள் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல்மாகாண சிரேஷ்ட உப பொலிஸ் மாஅதிபர் அனுசர சேனாநாயக அவர்களின் முழுமையான மேற்பார்வையின் கீழ் மிரிஹான விசேட குற்றத் தடுப்புப் பிரிவு இக்கைதுகளை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment