அல் கைதா அமைப்பு இலங்கை மற்றும் பங்களாதேஸ் நாடுகளில் இயங்குவதாகவும்
அந்த குழுவினர் அமெரிக்காவுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கா நுழைவதாகவும்
அமெரிக்க ஊடக அறிக்கை ஒன்று தெரிவிப்பதாக இலங்கையின் ஆங்கில இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது .
மேலும் அந்த செய்தியில் , போஸ்டன் குண்டு
வெடிப்புக்கு பின்னால் ஈரான் இருப்பதாகவும் ஈரானின் ஹுதா இராணுவம் ( ஈரான்
புரட்சியை பாதுகாக்கும் அரச படை ) லெபனான்- ஹிஸ்புல்லாஹ் இயக்கம் மற்றும்
இலங்கை மற்றும் பங்களாதேஸ் நாட்டில் இருக்கும் அல் கைதா நபர்களுடன்
தொடர்பான மூலங்களுடன் தொடர்பை கொண்டிருப்பதாகவும் WND.com, இணையம்
மற்றும் வாசிங்டனில் இயங்கும் அமெரிக்காவின் சுயாதீன செய்தி வலையமைப்பு
ஆகியனவும் தெரிவித்துள்ளதாக அந்த இலங்கை ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது .
No comments:
Post a Comment