தென்னிந்தியப் பொருட்களை புறக்கணிக்கப்போவதாக துறைமுக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
துறைமுக தொழிலாளர் நலன் பேணும் சங்க மகேஷ் சமரவிக்கிரம இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
தமிழகம் சென்ற பௌத்த பிக்குக
ள் மற்றும் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்
தெரிவித்தே, தென்னிந்திய பொருட்களை புறக்கணிக்கும் முடிவினை எடுத்ததாக
துறைமுக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து இலங்கை வரும் பொருட்களை
புறக்கணிக்க துறைமுக தொழிலாளர்கள் விரும்புவதாக, மகேஷ் சமரவிக்கிரம
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழக முதலமைச்சர் ஜெயலலித்தா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி
ஆகியோருக்கு எதிராக பதாதைகளையும் தொழிலாளர்கள் வைத்துள்ளதாகவும் துறைமுக
உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் எந்தவகை இறக்குமதி புறக்கணிப்புகளுக்கும் திட்டமிடவில்லை என, கொழும்பு துறைமுக அதிகாரசபை செய்திகள் தெரிவிக்கின்றன.
தொழிற்சங்கத்தினர் போராட்டம் ஒன்றிற்கு தயாராகவுள்ளதாக தமக்கு தகவல்
கிடைக்கப்பெற்றதாகவும், எனினும் போராட்டத்திற்கு அவர்களை அனுமதிக்கவில்லை
எனவும், கொழும்பு துறைமுக அதிகாரசபை செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment