பொதுபல சேனாவை தடை செய்யவும் நற்பெயரை கெடுக்கவும் பல குழுக்கள் செயற்பட
ஆரம்பித்துள்ளதாகவும் பொதுபல சேனாவின் பெயரை பயன்படுத்தி நாட்டில் பல்வேறு
குழப்பங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக இணைய தளங்களில்
பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தொடர்பில் பாதுகாப்பு
தரப்பினரிடம் முறைப்பாடுகளை செய்துள்ளோம் என பொதுபல சேனாவின் பொதுச்
செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவை அழிக்க எவராலும் எப்போதும் முடியாது. வீண் முயற்சிகளை மேற்கொண்டு முகத்தில் கரியைப் பூசிக் கொள்ளாமல் அமைச்சர் வாசு தேவ நாணயக்கார தனது சொந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதே சிறந்தது என்று
விடுதலைப் புலிகளைக் கூட தடை செய்யுமாறு கூறாதவர்கள் இன்று பொதுபல சேனாவை தடை செய்ய அமைச்சரவை பத்திரம் தயாரிக்கின்றமை வேடிக்கையாக உள்ளது. இவ்வாறானவர்களை அரசாங்கத்தில் வைத்திருப்பது ஜனாதிபதிக்கே அவமானமாகும். அதேபோன்று பொதுபல சேனாவிற்கு எதிராக செயற்படும் குழுக்கள் மற்றும் சமூக இணைய தளங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பிற்கு முறைப்பாடுகளைச் செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே ஞானசாரதேரர் மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பொதுபல சேனாவை தடை செய்யவும் நற்பெயரை கெடுக்கவும் பல குழுக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. பொதுபல சேனாவின் பெயரை பயன்படுத்தி நாட்டில் பல்வேறு குழப்பங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக இணைய தளங்களில் பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரிடம் முறைப்பாடுகளை செய்துள்ளோம். இந்த நிலையில் பொதுபல சேனாவின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடும் செய்திக்குறிப்புகள் தொடர்பில் ஊடகங்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அதேபோன்று பொதுபல சேனாவை தடை செய்ய வேண்டும் என்ற அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளதுடன் விசேட அமைச்சரவைப் பத்திரமும் தயாரித்து வருகின்றார். இச்செயற்பாடு வேடிக்கையாகவே உள்ளது.
ஏனெனில் பொதுபல சேனாவை தடை செய்வதற்கான காரணம் என்ன என்பதையோ நாம் செய்த குற்றத்தினையோ முதலில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வெளிப்படுத்த வேண்டும்.
கடந்த யுத்த காலப்பகுதியில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு கூறி பிரிவினை வாத சக்திகளுடன் செயற்பட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று நல்லிணக்கம் தொடர்பில் பேசுகின்றார். எவ்வாறாயினும் பொதுபல சேனாவை எவராலும் அழிக்க முடியாது. 2500 ஆண்டு பெளத்த பின்னணியுடன் உதயமாகியதே இந்த சேனா எனக்கூறினார்.
No comments:
Post a Comment