முஸ்லிம் சமூகத்தின் தொப்பிகளையும், அபாயாங்களையும் பாதுகாக்க வேண்டும்.
என்றால் எமது இந்த சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகள் ஒன்றினைய வேண்டிய
கட்டாயத் தேவைப்பாடு எமக்குள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைக்
கருத்திற் கொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப்
ஹக்கிம், தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, அகில
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் ஆகியோர்
கூட்டிணைந்து ஒருமித்த கருத்துடன் செயற்பட முன் வாருங்கள். அடுத்த கட்டமாக
இந்தப் பேரினவாதிகளுக்கு என்ன செய்வதென்பதை நாங்கள் காட்டுகின்றோம்.
இந்த நாட்டில் மிகவும் அமைதியாகவும், சகல இன மக்களோடு சமாதானமாகவும்
வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு பேரினவாதிகள் பெரும் நெருக்கடிகளை
கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆதலால் இன்று எமக்கு மிகவும் அவசரமாக தேவைப்படுவது இந்த மூன்று
சிறுபான்மைக் கட்சிகளினது தலைமைகளும் ஒன்றிணைவதாகும். அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியின் தலைமை இதற்கான வேலைத்திட்டங்களை செய்வதற்கு தன்னாலான
தியாகங்களை செய்ய வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து
சிறுபான்மை இனத்தின் உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய காலம்
இப்போது கனிந்துள்ளது. அப்போதுதான் சிங்கள பேரினவாதிகளிடமிருந்து இந்த
சமூகங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்
சிங்கள பேரினவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டுமானால்
முஸ்லிம்களின் மூன்று சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகளும் ஒன்றிணைய
வேண்டும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment