Tuesday, April 2

முஸ்லிம் அமைச்சர்கள் குழுவின் யோசனைகள்

2நாட்டில்  முஸ்லிம்கள்   ஹலால் உரிமையை உத்தரவாதப் படுத்தி அதை ஒரு பொறிமுறையின் ஊடாக செயல்படுத்து செயல்முறை உத்தரவாதப் படுத்தப் படவேண்டும். என்பதை இன்று இடம்பெறப் போக்கு அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் முன்வைத்தல் . மற்று முஸ்லிம் சமூகத்துக்கு அதன் நிறுவங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதாக இருந்தால் சட்ட நடவடிக்கை அவசியமாகவுள்ளது   எனவே . பெப்பிலியான முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான  வர்த்தக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக  அழுத்தம் கொடுத்தல் ஆகியன முஸ்லிம் அமைச்சர்களின் விசேட  சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக இன்று நாட்டில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் முஸ்லிம் அமைச்சர்களின் சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றது. இச்சந்திப்பிலேயே இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அமைச்சர் பெளஸியின் வீட்டில் நடைபெற்ற இச்சந்திப்பில் அமைச்சர்களான பெளஸி, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன், அதாவுல்லா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் .
அதேவேளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் வழங்கியதில் தவறில்லை. என்பதையும் அமைச்சர்கள் குழு இன்று அமைச்சர்கள் உப குழு கூட்டத்தில்  வலியுறுத்தவுள்ளது என  தெரிவிக்கப்படுகிறது . நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதோருக்கு எவ்வித சங்கடத்தையும் ஏற்படுத்தா வண்ணம் நல்லதொரு முடிவை கௌரவ அமைச்சர் எம்.எச்.எம்.பௌஸிதலைமையில் பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுத்தரல்  வேண்டும்.  என  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment