பெரும்பாலும் சைவ மக்கள் வாழ்ந்து வரும்
கன்னியா (திருகோணமலை) கொதிநீர் கிணறுகள் அமைந்துள்ள பகுதியும் பெளத்த
மதத்தின் அடையாளமே எனக் குறிப்பிட்டு அப்பகுதியில் தற்போது புத்தர் சிலை
நிறுவப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிக்கு “உனுதிய லின் ரஜ மஹா விஹாரய” எனப
பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இந்தியாவில் காசிக்குச் செல்வது போன்று
இலங்கையில் சைவ மக்கள் புனிதத்தலமாக உபயோகித்து வரும், புராணங்களின்
அடிப்படையில் பெளத்த மதத் தோற்றத்துக்கும் முன்னதான வரலாற்றுத் தொடர்பும்
கொண்டுள்ள இக்கிணறுகள் தற்போது பெளத்த மதத்துக்குச் சொந்தமானதாகப்
பிரகனப்படுத்தப்பட்டுள்ளதோடு அங்கு “விஹாரை” அமைக்கப்பட்டிருப்பதனால்
அதற்கான சங்க பீடம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும் என்பதையும்
சுட்டிக்காட்டிய பிரதேச வாழ் மக்கள் இது முற்று முழுதான கலாச்சார
அத்துமீறல் எனவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் அனைத்து மதங்களும் தமது
கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் இணைக்கப்பட்ட பல தளங்களைப் புனிதத்தளமாகக்
கொண்டிருக்கின்றன. எனினும், தற்போது வளர்ந்து வரும் இனவாதத்தின் போக்கானது
பெளத்த மதம் தவிர்ந்த ஏனைய எந்த மதத்திற்கும் இலங்கையில் வரலாற்று ரீதியான
அடையாளங்கள் இருக்கக்கூடாது எனும் அடிப்படையில் இயங்குவது உடனடியாக உணரப்பட
வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment