நீர்கொழும்பு
கொச்சிக்கடையில் தப்லீக் கஸ்து மேற்கொண்டிருந்த ஒருவர் மீது சிங்களவர்
ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை
நடைபெற்றுள்ளது. தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த சிலர் கஸ்து செல்லும்போது
கடையொன்றுக்குச் சென்று அங்கிருப்பவரை பள்ளிவாசலுக்கு வருமாறு அழைத்தபோதே
முச்சக்கரவண்டிச் சாரதியொருவர் தப்லீக் ஜமாஅத் அங்கத்தவரை தாக்கியுள்ளார்.
தாக்குதல் நடத்தவிட்டு தப்பிச்சென்ற
சாரதியை கொச்சிக்கடை பொலிஸார் அவருடைய ஊரான தங்கொட்டுவைக்குச் சென்று
கைதுசெய்துள்ளனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை
எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது
No comments:
Post a Comment