Sunday, March 17

இன்று கண்டியில் நடந்த பொது பல சேனா கூட்டத்தின் ஒரு விரிவான பார்வை..(படங்கள் இணைப்பு)

இன்று கண்டியில் ஹலால் எதிரப்பு இயக்க வெற்றியின் பெரும் முழக்கம் பொது பல சேனாவால் முன்னெடுக்கப்பட்டது.முப்பது வருட கால யுத்ததம் ஒன்றை  அனுபவித்த நாங்கள் மற்றுமொரு இனவாத அல்லது மத வாத யுத்தம் எற்பட இடமளிக்க  மாற்றோம் என்று பொது பல செனா இயக்கத்தின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
இன்று 2013 03 17 மாலை கண்டி நகரில் மத்திய சந்தை முன் இடம் பெற்ற பொது பல சேனாவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய கிரம விமலஜோதி தெரர் இவ்வாரும் தெரிவித்தார்.
நாங்கள் 400 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு சக்திகளாள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தோம். அக் காலத்தில் நாங்கள் எதிர்நோக்கிய சவால்கள் என்னிலடங்காது. சிங்கள பௌத்த மக்கள் அன்று முதல் உயிர் தியாகம் செய்தே இன் நாட்டை பாதுகாத்தனர்.
தற்போது மீண்டும் எம் நாட்டுக்கு பல்வேறு வடிவில் சவால்களும் ஆக்கிரமிப்புக்களும் வந்த வண்ணம் உள்ளன. இலங்கையில் 400 க்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன் அவை கிறிஸ்தவ தர்மத்தை பறப்பும் நோக்கில் செயற்படுகின்றன. அவற்றில் அனேகமானவை, பாலர் பாடசாலை, ஆங்கில வகுப்பு, புன்னிய கர்மங்கள், மற்றும் பலதரப்பட்ட உதவிகள் என்ற பெயரில் தமது சமயத்திற்கு அப்பாவி பௌத்த மக்களை உள்வாங்கி இலங்கையை ஒரு கிறிஸ்தவ நாடாக மாற்ற முயற்சிக்கின்றன. 
அதே நேரம் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த இளைஞர் யுவதிகளை பல வளிகளில் மத மாற்றம் செய்து  இன்னும் 50 வருடங்களில் இலங்கையை இஸ்லாமீய நாடாக மாற்ற விஷேட திட்டம் ஒன்றும் அமுல் படுத்தப்படுகிறது. ஏங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி முஸ்லிம்களது வர்த்தக நிலையங்களில் சிங்கள யுவதிகளுக்க வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்களை பல வழிகளில் மத மாற்றம் செய்கின்றனர். தயவு செய்து இதன நிறுத்துமாரு அவர்டகளிடம் நான் கேற்கின்றேன். இல்லாதவிடுத்து சிங்கள யுதவிகளை முஸ்லிம்களது வர்த்தக நிலையங்களில் வேலைக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டிவரும்.
நாங்கள் இந்த அபாயகரமான நிலையை உணர்ந்து கடந்த மே மாதம் முதல் நடாத்திய போராட்டதின் பாரிய வெற்றிதான் ஹலால் வெற்றியாகும். 
எங்களில் சிலர் எமக்கு குற்றம் கூறுகின்றனர். நாங்கள் இன யுத்தம் ஒன்றையும் மத யுத்தம் ஒன்றையும் திணிக்க முற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இருந்த போதும் நாங்கள்  30 வருடங்களாக நாங்கள் அனுபவித்த யுத்தம் காரணமாக நாட்டின் அனைத்து இன மக்களும் பாதிக்கப்ட்டனர். எனவே இன்னுமொரு இன மத மோதலை ஏற்படுத்த நாங்கள் இடம் அளிக்க மாட்டோம் என கூற விரும்புகினறோம். இன்று இவ்வளவு பாரிய மக்கள் கூட்டம் இங்கு குழும்p இருப்பது பொது பல சேனா இயக்கத்தினால் கடந்த சில மாதங்களில் பெற்றுக் கொண்ட வெற்றியின் அடிப்படையிலாகும்.
இங்கு உரையாற்றிய பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
பாரிய ஒரு வெற்றியை  பெற்ற பின் இன்று நாங்கள் கண்டி நகருக்கு வந்துள்ளோம். எங்களுக்கு அஸ்கிரி மல்வத்த பீடங்களில் அசீர்வாதமும் ஸ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னத்தின ஆசீர்வாதமும் கிடைத்துள்ளன. 
கடந்த சில வருடங்கலாக எவ்வித சட்ட புர்வமான அதிகாரமும் இல்லாமல் மக்களை எமாற்றிக் கொண்டு ஹலால் சான்றிதல் வழங்கிய பொய்கார ஜம்மியதுல் உலமா சபைக்கு  எதிராக நாங்கள் போர்க் கொடி பிடித்தோம்.
எங்கள் போராட்டம் வலுப்பெற்ற பின் உலமா சபையின் போக்கு மாறி விட்டது. அவர்கள் குர்ஆனுக்கு அப்பால் சென்று ஹலால் சான்றிதலை வழங்கி உள்ளதை நாங்கள் சவால் விட்ட போது உலமா சபை விலகி நின்றது. அவர்கள் ஹலால் சான்றிதலை பாதுகாக்க , ஜனாதிபதி, முன்னால் பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க, அமைசச்ர்கள், மல்வத்த அஸ்கிரிய பீடங்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் , கல்விமான்கள் உற்பட பலரிடம்; சென்ற போதும் அவர்களது வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. 
இன் நிலையில் நாங்கள் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், உளவுப் பிரிவின் உயர் அதிகாரிகள் , பாராளுமன்ற தெரிவுக்குழு ஆகிய அனைத்து பிரிவுகளையும் சந்தித்து ஹலால் பற்றிய எமது நிலைப்பாட்டை விளக்கினோம். அதே நேரம் உலமா சபை தமது நிலைப்பாட்டை நாளுக்கு நாள் மாற்றினர். ஹலால் சான்றிதலுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என அறிந்த உலமா சபை அதனை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினர். அரசு அதனை நிராகரித்தது.
இறுதியில் வேறு வழியின்றி ஹலால் சான்றிதல் வழங்கும் தமது செயற்பாட்டை  உலமா சபை நிறுத்திக் கொண்டது. 
ஹலால் தற்போது முடிந்த பிரச்சினை;. நாங்கள் இதன் பின் ஹலால் சம்பந்தமாக பேச மாட்டோம். இருந்த போதும் எங்களுக்கு இன்னும் பல விடயங்கள் தொடர வேண்டியுள்ளது. அவற்றையும் முன்னெடுப்பதற்கு, ஹலால் சான்றிதலை ஒழிக்க வழங்;கிள பங்களிப்பு போன்று இதற்கும் இளைஞர்கள் உற்பட  பொது மக்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
இக் கூட்டத்தை ஒழுங்கு செய்த மடவல ஜினமங்கலாராம விஹாரையின் விஹாராதிபதி நியங்கொட ஹிமி வரவேற்புரையை நிகழ்த்தினார். இளைஞர்களுக்கு கெப் தொப்பிகள் டீஷேர்ட் என்பன இலவசமாக வழங்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.
இன்று காலை முதல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கூடிய பெருந்தொகையான பௌத்த தேரர்களும் பொது மக்களும் பிற்பகள் 2.00 மணி முதல் ஊர்வலாமாக கூட்டம் நடை பெற்ற கண்டி மத்திய சந்தை திடலில் கூடினர். 
மேலும் இந்நிகழ்வின் போது பொது பல சேனா அமைப்பினரால் அவர்களின் இலச்சினை பொறிக்கப்பட்ட டி சேர்ட்கள் மற்றும் அவர்களின் பத்திரிகை என்பன பொது மக்களிடம் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது





 


No comments:

Post a Comment